விஜய் டிவி “மௌன ராகம் 2” தொடரில் முக்கிய நடிகர் மாற்றம் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "மௌன ராகம் 2" தொடரில் முக்கிய நடிகர் மாற்றம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “மௌன ராகம் 2” தொடரில் முக்கிய நடிகர் மாற்றம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்றான மௌன ராகம் 2 தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த பதிவை புதிதாக நடிக்க உள்ளவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மௌன ராகம் 2:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக ப்ரைம் டைம் சீரியல்களால் தொடர்ந்து TRPயில் முன்னிலையில் உள்ளது. அந்த வரிசையில் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மௌன ராகம் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியல் முதல் சீசன் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது.

சன் டிவி “ரோஜா” சீரியலில் களமிறங்கும் முன்னணி நடிகை – வெளியான புகைப்படம்!!

முதல் சீசனில் வெளியாகாத திருப்பங்கள் அனைத்தும் இரண்டாவது சீசனில் வெளியாகி வருகிறது. அதனால் இரண்டாவது சீசனுக்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர். மேலும் முதல் சீசனை விட விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் களமிறங்கும் தொகுப்பாளினி பிரியங்கா – வெளியான தகவல்!!

அதாவது இந்த சீரியலில் வருன்-தருண் ஆகிய ஹீரோக்களின் தந்தை வேடத்தில் நடிக்கும் நடிகரை தான் மாற்றம் செய்துள்ளார்கள். ஏற்கனவே நடித்த அதாவது மகேஸ்வரனுக்கு பதிலாக இப்போது கேகே மேனன் என்பவர் நடிக்க உள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!