முக்கியமான ஒப்பந்தங்கள் – மே 2019

0

முக்கியமான ஒப்பந்தங்கள் – மே 2019

இங்கு மே 2019 மாதத்தின் முக்கியமான ஒப்பந்தங்கள் – மே 2019 பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மே மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – மே 2019

சர்வதேச ஒப்பந்தங்கள்:

இந்தியா-சீனா இடையே இந்திய மிளகாய் ஏற்றுமதிக்கு ஒப்பந்தம்

  • இந்திய வர்த்தகத் துறை செயலாளர் அனுப் வதவான் மற்றும் சீன பொது  நிர்வாகத் துறை அமைச்சர், லீ குவாவும் புதுடில்லியில்  நடந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை பலப்படுத்தவும் வர்த்தகம் மேற்கொள்வதில் உள்ள பிரச்னைகளை தீர்க்கவும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு இந்திய மிளகாயை ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட்டனர்.
ஜனாதிபதி ஜி ஜின்பிங்
பிரீமியர் லீ கெகியாங்
தலைநகர் பெய்ஜிங்
நாணயம்  ரென்மின்பி

கொங்கன் ரயில்வே நேபாளத்துடன் ஒப்பந்தம்

  • கொங்கன் இரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (KRCL) நேபாளின் இரயில்வே துறைக்கு இரண்டு 1600 HP DEMU ரயில்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி
பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி
தலைநகர் காத்மாண்டு
நாணயம்  நேபாள ரூபாய்

 

இந்தியா, வியட்நாம் இடையே அணு சக்தி, பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு

  • பாதுகாப்புத்துறை, அணுசக்தி மற்றும் விண்வெளி, எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பை பலப்படுத்த இந்தியாவும் வியட்நாமும் உடன்பட்டன. துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமிற்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கூகுயின் ஜுவான் பக்
பிரதமர் நேயென் ஃபூ ட்ரொங்
தலைநகர் ஹனோய்
நாணயம்  டோங்

தைவான் பல்கலைக்கழகத்துடன் ஐஐடிதில்லி ஒப்பந்தம்

  • தில்லியின் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் நேஷனல் சியா தாங் பல்கலைக்கழகம் (NCTU), தைவான், ஒன்றாக இணைந்து வேலை மற்றும் கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கூட்டு டாக்டர் பட்டத் திட்டம் உருவாக்கி வழங்க, ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.
ஜனாதிபதி சாய் இங்-வென்
பிரதமர் சூ செங்-சேங்
தலைநகர் தைபே
நாணயம்  புதிய தைவான் டாலர்

 

விஜயவாடாவுடன் இந்தோனேசியா ‘சகோதரி நகர’ ஒப்பந்தம்

  • ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவிலிருந்து ஜாவாவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள ஜகார்த்தா, பாலி எரிமலை காடுகளுக்கு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கவும், கலாச்சார உறவு மற்றும் கல்வியை மேம்படுத்தவும் விஜயவாடாவுடன் இந்தோனேசியா ‘சகோதரி நகர’ ஒப்பந்தம் செய்து கொண்டது.
ஜனாதிபதி ஜோக்கோ விதோடோ
துணை ஜனாதிபதி யூசுப் கல்லா
தலைநகர் ஜகார்த்தா
நாணயம்  இந்தோனேஷியன் ரூபியா

 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மேம்படுத்த இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா இடையே கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தானது.

  • கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் தொடர்பாக இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா இடையே ஒரு கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இத்திட்டமானது 500 மில்லியன் டாலர்கள் முதல் 700 மில்லியன் டாலர்கள் வரையிலான செலவில் ஒப்பந்தமாகியுள்ளது. கடந்த ஆண்டு முதலே நடந்த ஒப்பந்தம் பேச்சுவார்த்தையானது தற்போது கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி

மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
தலைநகர் கொழும்பு
நாணயம்  இலங்கை ரூபாய்

மாலத்தீவுக்கு 16 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை இந்தியா உறுதி செய்தது

  • அண்டை நாடுகளில் குறிப்பாக, சுகாதார மற்றும் சுகாதாரத் துறையில் சமூக-பொருளாதார உள்கட்டமைப்பை உருவாக்க இந்தியா அதன் உதவித் தொகையின் ஒரு பகுதியாக, மாலத்தீவுக்கு 16 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை உறுதி செய்தது
  • மாலத்தீவு முழுவதும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு 11 ஆம்புலன்ஸ் கொள்முதல் மற்றும் விநியோகம் செய்ய, தீவில் அவசரகால மருத்துவ சேவைகளை நிறுவுதல், 61 தீவுகளுக்கு வெளிப்புற உடற்பயிற்சி உபகரணங்களை வழங்குதல் மற்றும் தீவுகளில் இரண்டு வகுப்பு அறைகளை உருவாக்குதல் போன்ற ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டன.
ஜனாதிபதி இப்ராஹிம் மஹ்மத் சோலிஹ்
துணை ஜனாதிபதி பைசல் நசிம்
தலைநகர் மேல்
நாணயம்  மால்டிவியன் ரூபியா

 தேசிய ஒப்பந்தங்கள்:

M / S CSL மற்றும் M / S GRSE இடையே ஒப்பந்தம்

  • M / s CSL, கொச்சி மற்றும் M / S GRSE கொல்கத்தா ஆகியவற்றில் இருந்து தலா எட்டு Anti Submarine Warfare Shallow Water Craft (ASW SWC) கப்பல்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்திய கடற்படைக்கான பதினாறு Anti Submarine Warfare Shallow Water Craft (ASW SWC) கொள்முதல் செய்ய M / S CSL மற்றும் M / S GRSE உடன் ஒப்பந்தம் கையெழுத்திடபட்டுள்ளது.

 வருமான வரித் துறை, GSTN இடையே முரண்பாடுகளைத் தடுக்க தரவை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து

  • வருமான வரித் துறை மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி நெட்வொர்க் (ஜிஎஸ்டிஎன்) இடையே இரு தரப்பு நிறுவனங்களுடன் தரவுகளை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது நிறுவனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை களைவதற்கு வழிவகுக்கும்.

உத்தரகண்டில் ருத்ராக்ஷ் மரங்கள் நடுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து

  • நமாமி கங்கை திட்டத்தின் கீழ் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தரகண்டில் ருத்ராக்ஷ் மரங்களை நடுவதற்காக சுத்தமான கங்கைகான தேசியத் திட்டம், ஹெச்.சி.எல்.[HCL] ஃபவுண்டேஷன் மற்றும் இன்டாச்[INTACH] இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரிலையன்ஸ் – BP எண்ணெய் பிளாக்குக்கான முதல் ஏலத்தை எடுத்தது

  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் பிரிட்டிஷ் பங்குதாரரான பி.பி. பி.எல்சி.[BP Plc] நிறுவனம், எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கான 32 பிளாக் அப்களில் ஒன்றை ஏலத்தில் எடுத்தது.

புற்றுநோய் ஆராய்ச்சியில் கூட்டு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • இந்திய உயிர் தொழில்நுட்பத் துறை (DBT) மற்றும் அணுசக்தித் துறை (DAE) இடையே புற்றுநோய் ஆராய்ச்சியில் கூட்டு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

MSME அமைச்சகத்துடன் NSIC ஒப்பந்தம் செய்துள்ளது

  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன (MSME) அமைச்சகத்துடன் தேசிய சிறு தொழில்கள் கழகம் (NSIC) 2019-20 ஆம் ஆண்டுக்கான புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது.

PDF Download

Click Here to Read English

Current Affairs 2019 Video in Tamil

சாதனையாளர்களின் பொன்மொழிகள்-Motivational Video 

பொது அறிவு பாடக்குறிப்புகள்

To Follow  Channel – Click Here

Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!