வணிக செய்திகள் – மே 2019

0

வணிக செய்திகள் – மே 2019

இங்கு மே மாதத்தின் வணிக செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மே மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – மே 2019

வணிக செய்திகள்:

இந்தியாவில் இருந்து 5 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்ய அமேசான் முனைப்பு

 • கடந்த மூன்று ஆண்டுகளில் இ-வணிக நிறுவனமான அமேசானின் உலகளாவிய விற்பனை திட்டம் மூலம் இந்தியாவில் இருந்து மொத்தம் இ-வணிக ஏற்றுமதி விற்பனை 1 பில்லியன் டாலர் மதிப்புக்கு செய்யப்பட்டு ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. 2018 ஆம் ஆண்டிற்கான இந்திய இ-வணிக ஏற்றுமதியில் 56% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஜி.எஸ்.டி சேகரிப்பு, ஏப்ரல் 2019 ல் மிக அதிகமான வசூலை பதிவு செய்தது

 • 2019 ஏப்ரலில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் 1,13,865 கோடியாகும். 2018 ஏப்ரல் மாதத்தில் வருமானம் ரூ. 1,03,459 கோடியாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாத வருவாயுடன் ஒப்பிடுகையில் 10.05 % வருமானம் அதிகரித்துள்ளது. கோடியாகும். 2019 ஏப்ரல் மாதத்தில் வருமானம் ரூ. 98,114 கோடியாகும். இது மாத சராசரி வருவாயைவிட 16.05% அதிகமாகும்.
 • ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மிக அதிகமான வசூலை 2019 ஏப்ரல் மாதம் பதிவு செய்தது.

BASF இந்தியா பெற்றோர் நிறுவனத்துடன் வர்த்தக பிரிவுகளை மறுசீரமைக்கின்றது

 • BASF இந்தியா அதன் வர்த்தக நிறுவனமான BASF Societas Europaea, ஜெர்மனியின் புதிய பெருநிறுவன மூலோபாயத்தின் அடிப்படையில் ஆறு முக்கிய பிரிவுகளில் தனது வர்த்தகத்தை மறுசீரமைத்துள்ளது.

ஜெட் ஏர்வேஸின் அலுவலக இடத்தை எச்.டி.எஃப்.சி ஏலத்தில் விட முடிவு

 • அடமான கடன் வழங்கும் வீட்டுவசதி மேம்பாட்டு நிதிக் கழகம் (எச்டிஎஃப்சி), கடனை திரும்ப செலுத்தாததால் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் அலுவலக இடத்தை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது.

மெட்ரோ ரெயிலுக்கு ADB நிதியுதவி செய்கிறது

 • ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), 1 பில்லியன் டாலர் மும்பை மெட்ரோவுடன் தொடர்பு கொண்டுள்ளது, மேலும் போபால் மெட்ரோ மற்றும் பெங்களூரு மெட்ரோ ஆகியவற்றிற்கு நிதியளிப்பதற்காக அந்தந்த மாநில அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கூடுதலாக புதிய இந்தூர் மெட்ரோ மற்றும் சென்னை மெட்ரோ IIம் கட்டத்திற்கு உதவுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்க-சீனா இடையே உள்ள பதட்டத்தினால் உலக பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்

 • அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய வர்த்தக அழுத்தங்கள் குறித்து கவலை தெரிவித்தார் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள பதட்டங்கள் உலகப் பொருளாதாரத்திற்கு முக்கிய அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியுள்ளார்.

ஆற்றல் பயன்பாட்டிற்காக PCRA உடன் டாபே[TAFE] ஒப்பந்தம்

 • விவசாயத்தில் ஆற்றல் பயன்பாட்டை திறம்பட பயன்படுத்துவதற்காக TAFE (டிராக்ட்டர்கள் மற்றும் பண்ணை உபகரண லிமிடெட்) மற்றும் பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கம் (PCRA) இடையே ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

ரத்தன் டாடா ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டியில் முதலீடு

 • டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, இந்தியாவில் EV பயன்பாடுகளை அதிகரிப்பதற்காக ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டியில் குறிப்பிடப்படாத அளவு முதலீடு செய்துள்ளார். டாடா நிறுவனம் ஓலாவின் தாய் நிறுவனமான ANI டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடிடிலும் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வால்கரோவின் புதிய பிராண்ட் தூதராக அமீர் கான் அறிவிக்கப்பட்டார்

 • காலணி பிராண்டாக வால்கரோ 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, வால்கரோவின் புதிய பிராண்ட் தூதராக அமீர் கான் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார்.

ஜி.எஸ்.டி பயிற்சி நிபுணர்களுக்கான தேர்வை NACIN நடத்தியது

 • ஜி.எஸ்.டி பயிற்சி நிபுணர்களுக்கான தேர்வை நடத்த சுங்க, மறைமுக வரிகள் மற்றும் நார்க்கோடிக்ஸ் தேசிய அகாடமி (NACIN) அங்கீகாரம் பெற்றது.

ஜூன் 16 ம் தேதி வரை அமெரிக்க பொருட்கள் மீதான பதிலடித் தடையை இந்தியா தாமதப்படுத்துகிறது

 • அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் மீதான அதிக கட்டணத்தை அமல்படுத்த ஜூன் 16 ம் தேதி வரை இந்தியா கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு மே 16 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதிகள் 1.34 சதவீதம் அதிகரித்துள்ளன

 • ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, வர்த்தகமும், பொருட்களும் இணைந்து, 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட34 சதவீதம் அதிகரித்துள்ளது.

கட்டண அமைப்புக்கான பார்வை ஆவணம்

 • இந்திய ரிசர்வ் வங்கி பாதுகாப்பான, வசதியான, விரைவான மற்றும் மலிவு இ-கட்டண முறையை உறுதி செய்வதற்கான பார்வை ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
 • டிசம்பர் 2021 ல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகமாக 8,707 கோடி ரூபாயாக உயரும் என தலைமை வங்கி எதிர்பார்க்கிறது. 

உயர்-கமிட்டி கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான அதன் பரிந்துரைகளை சமர்ப்பித்தது

 • கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான இந்தியாவின் சார்பை குறைப்பதற்காக மத்திய அரசின் உயர் மட்ட குழு அதன் பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது. டாக்டர் அனில் ககோத்கர், சிறந்த விஞ்ஞானி மற்றும் சிதார்த் பிரதான், நிதி மற்றும் வரி விவகாரங்களில் நிபுணர் இந்த உயர்மட்ட குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

2020ம் நிதியாண்டில் இந்தியா 7.1 சதவிகிதம் வளர்ச்சி: ஐ.நா. அறிக்கை

 • 2020ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் வலுவான உள்நாட்டு நுகர்வு மற்றும் முதலீட்டால் 7.1 சதவீத வளர்ச்சியை அடையும் என்று ஐக்கிய நாடுகளின் அறிக்கை கூறியுள்ளது.

FPI விதிகளை மாற்ற செபி தீர்மானித்துள்ளது

 • செபி தாராளமயமாக்கப்பட்ட முதலீடு, தடைசெய்யப்பட்ட துறைகளின் மதிப்பாய்வு மற்றும் சந்தை-சந்தை பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது.FPI க்கள் மற்றும் மாற்று முதலீட்டு நிதிகள் (AIF கள்)ஒழுங்குமுறைகளை சரிப்படுத்தவும் மேலும் FPI ஒழுங்குமுறை மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டம் (FEMA) ஆகியவற்றில் முதலீட்டு கட்டுப்பாட்டிற்கும் இடையேயான ஒத்திசைவை சரிப்படுத்தவும் இந்த குழு முடிவெடுத்துள்ளது.

இந்தியாவில் முதல் இசைக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை யமஹா நிறுவனம் தொடங்வுள்ளது

 • ஜப்பானை தலைமை இடமாக கொண்ட யமஹா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் இசைக்கருவி தொழிற்சாலையை தொடங்கவுள்ளது இதன் மூலம் ஆண்டுதோறும் ஒன்றரை  லட்சம் போர்ட்டபிள் கீபோர்டுகள் மற்றும் இரண்டு லட்ச கிட்டார்களை ஆண்டுதோறும் தயாரிக்க முடிவுசெய்துள்ளது.

2020 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1% வளர்ச்சி அடையும் என FICCI சர்வே கணித்துள்ளது

 • நாட்டின் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020 நிதியாண்டில் 7.1 சதவிகிதம் மற்றும் 2021 நிதியாண்டில் 7.2 சதவிகிதம் வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. FICCI இன் பொருளாதார ஆய்வின் படி, 2019-20 நிதியாண்டில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வளர்ச்சி – 6.8 சதவிகிதம் மற்றும் 7.3 சதவிகிதமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

வங்கி செய்திகள்:

FY19ல் வங்கி கடன்கள் 13.2% வளர்ச்சி

 • முந்தைய நிதியாண்டு வங்கி கடன் 10.3%-த்தை ஒப்பிடும்போது, 2018-19 நிதியாண்டில் வங்கி கடன் 13.2% வளர்ச்சியுற்றுள்ளது. இந்த ஆண்டு குறிப்பாக ​​சேவைகள் மற்றும் சில்லரை துறைகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வைப்புத்தொகையின் 6.7% வளர்ச்சியை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வளர்ச்சி 10% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ESAF வங்கி 234% லாபம் ஈட்டியது 

 • கேரளாவை அடிப்படையாகக் கொண்ட ESAF சிறிய நிதி வங்கி லிமிடெட் நிறுவனம் அதன் இரண்டாம் வருடத்தில், 2019 நிதியாண்டில் அதன் நிகர இலாபத்தில் 234% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது, இது பெரும்பாலும் அதிக வட்டி வருமானம் மற்றும் திறமையான NPA மேலாண்மையால் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி நிர்வாக இயக்குனர் நியமனத்திற்கு ஆர்பிஐ ஒப்புதல்

 • எச்.டி.எஃப்.சி. வங்கியின் டிஜிட்டல் வங்கி தலைவரான நிதின் சக்கை, உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமித்ததற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

 ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க உள்ளது

 • இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவானது ஒரு சிறப்பு மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. வணிக வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்தும் நோக்கில் அந்தக் குழு உருவாக்கப்படவுள்ளது.

Download PDF

Click Here to Read English

Current Affairs 2019 Video in Tamil

சாதனையாளர்களின் பொன்மொழிகள்-Motivational Video 

பொது அறிவு பாடக்குறிப்புகள்

To Follow  Channel – Click Here

Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!