இந்திய IT நிறுவனங்களில் பெருகும் வேலைவாய்ப்புகள் – ஆய்வு தகவல்!
தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப சேவைகளை நிறைவேற்றுவதற்கு இந்தியாவை சேர்ந்த முன்னணி IT நிறுவனங்கள் புதிய பணியமர்த்தலை அதிகப்படுத்தி வருகிறது. இதனிடையே இந்நிறுவனத்தின் பங்குகளும் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
IT வேலைவாய்ப்புகள்:
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு வகையான சேவைகள் முடக்கப்பட்டிருக்கும் சமயத்தில் இந்தியாவில் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதீத வளர்ச்சியை சந்தித்து வருகிறது. நோய் தொற்று காலத்திலும் இந்த நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணியில் அமர்த்தும் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் IT ஊழியர்களின் சம்பள உயர்வு, போனஸ், பதவி உயர்வு போன்றவையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடரும் என கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 முக்கிய தடுப்பு நடவடிக்கைகள் – மத்திய அரசு!
தொழில்நுட்ப நிறுவனங்களின் இந்த வளர்ச்சி குறித்து MK ஆராய்ச்சி நிறுவனம் கூறுகையில், ‘இந்திய தொழில்நுட்ப துறையில் கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனலிட்டிக்ஸ், டிஜிட்டல் மாற்றங்கள், சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு போன்ற பணிகளில் ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளது. இவற்றை நிறைவேற்றும் வகையில் புதிய பணியமர்த்தல் இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடரலாம்’ என குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் முதல் நிலையில் இருக்கும் சில IT நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.9% – 12.2% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்த வளர்ச்சி வரும் நாட்களில் சுற்றுலா மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 14 – 16% ஆக அதிகரித்துள்ளது. மேலும் HCL நிறுவனம் வரும் காலாண்டில் 5 – 7% வரை வளர்ச்சியை எதிர்பார்த்துள்ளது. இந்த புதிய வளர்ச்சிக்கு பணியமர்த்தல் என்பது முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே IT நிறுவனங்களின் பங்கு விலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன் கீழ் TCS நிறுவனத்தின் பங்கு 1.32% அதிகரித்து, இன்று (ஆகஸ்ட் 28) 3,720.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது. மேலும் Wipro நிறுவனத்தின் பங்கு 0.95% அதிகரித்து 634.95 ரூபாயாகவும், HCL tech நிறுவனத்தின் பங்கு விலை 0.39% குறைந்து 1,162.95 ரூபாயாகவும், Infosys நிறுவனத்தின் பங்கு 1.09% குறைந்து 1,708.80 ரூபாயாகவும், Tech Mahindra நிறுவனத்தின் பங்கு விலை 0.28% குறைந்து 1,445.40 ரூபாயாகவும், Mphasis லிமிடெட் நிறுவனத்தின் பங்கு 5.52% அதிகரித்து 2,894.80 ரூபாயாகவும் மற்றும் Larson & turbo InfoTech லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 1.87% அதிகரித்து 5,233.60 ரூபாயாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.