சென்னை லிம்ரா நிறுவனம் நடத்தும் மாதிரி நீட் தேர்வு – ஆகஸ்ட் 25 மற்றும் 31 தேதிகளில் நடைபெறும்!!

0
சென்னை லிம்ரா நிறுவனம் நடத்தும் மாதிரி நீட் தேர்வு - ஆகஸ்ட் 25 மற்றும் 31 தேதிகளில் நடைபெறும்!!
சென்னை லிம்ரா நிறுவனம் நடத்தும் மாதிரி நீட் தேர்வு - ஆகஸ்ட் 25 மற்றும் 31 தேதிகளில் நடைபெறும்!!
சென்னை லிம்ரா நிறுவனம் நடத்தும் மாதிரி நீட் தேர்வு – ஆகஸ்ட் 25 மற்றும் 31 தேதிகளில் நடைபெறும்!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் ஆகஸ்ட் 25, 31 ஆகிய தேதிகளில் சென்னை லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் சார்பில் நடைபெற உள்ளது.

நீட் தேர்வு:

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வான நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு சென்னை லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி சேவையில் கடந்த 19 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் லிம்ரா நிறுவனம், ஆண்டுதோறும் நீட் தேர்வுக்கான மாதிரி வினாக்களை கட்டணம் எதுவும் வசூலிக்காமல் வழங்கி வருகிறது.

பாதுகாப்பு பெட்டகத்திற்கு புதிய விதிமுறைகள் – ரிசர்வ் வங்கி அதிரடி!

மேலும் இந்த நிறுவனத்தில் பல புகழ்பெற்ற பேராசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை நீக்கி வருகிறது. மாதிரித் தேர்வுகளை நடத்த, போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் கேரியர் பாய்ன்ட் நிறுவனத்துடன் லிம்ரா ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மாதிரி தேர்வு நடத்தும் உரிமையை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 25 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நண்பகல் 12 மணிக்கு இந்த 2 மாதிரி தேர்வுகளை எழுதலாம். இந்த தேர்வுகள் நீட் தேர்வு போலவே 3 மணி நேரம் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும்.

TN Job “FB  Group” Join Now

இந்த தேர்வுகளுக்கு வழக்கமாக ரூ.400 கட்டணம் செலுத்த வேண்டிய இந்த தேர்வுகளில் கலந்துகொள்ள கேரியர் பாய்ன்ட் ரூ.25 மட்டுமே வசூலிக்கிறது. ஆனால், லிம்ரா நிறுவனம் வழியாகச் சென்றால், தேர்வுக்கான பணத்தை லிம்ரா நிறுவனமே செலுத்தி விடுவதால், தமிழக லிம்ரா மாணவர்களுக்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது.கடந்த ஆண்டு கேரியர் பாய்ன்ட் நடத்திய தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 72 சதவீதம் நீட் தேர்வில் இடம் பெற்றன. பெரும்பாலான கேரியர் பாய்ன்ட் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்று பயின்று வருகின்றனர். மாணவர்கள் இந்த தேர்வு குறித்த விவரங்களை அறிய 9952922333 / 9444615363 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!