மகளிர் உரிமை தொகைக்கான நியூ அப்டேட் – சற்றுமுன் அமைச்சர் வெளியீடு!

0
மகளிர் உரிமை தொகைக்கான நியூ அப்டேட் - சற்றுமுன் அமைச்சர் வெளியீடு!

மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட நபர்களுக்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை கணக்கெடுப்பு:

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2023ம் ஆண்டு துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழக பெண்களின் வாழ்வாதாரத்தை, வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு ஆரம்ப கட்டத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் சமீப காலமாக இத்திட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக ஒரு சில பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகையானது சரிவர வழங்கப்படவில்லை.

மத்திய அரசின் ரூ.2000 எப்போது கிடைக்கும்? – வெளியான முக்கிய தகவல்!

இதனால் அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்து கொண்டே இருந்தது. மேலும் இதனை உடனே சரி செய்து தருமாறு அரசிடம் பெண்கள் கோரிக்கையும் வைத்து வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு மகளிர் உரிமைத்தொகை குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட நபர்களின் கணக்கெடுப்பு நடைபெற்று கொண்டு இருக்கிறது. இக்கணக்கெடுப்பில் இடம்பெற்றுள்ள நபர்களுக்கு தேர்தல் முடிந்த பின் நிச்சயம் ரூ.1000 வழங்கப்படும் என உறுதியாக கூறப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!