TNPSC Group 4 பழைய பாடத்திட்டமே தொடரும் – அமைச்சர் அறிவிப்பு

0
TNPSC Group 4 பழைய பாடத்திட்டமே தொடரும் - அமைச்சர் அறிவிப்பு
TNPSC Group 4 பழைய பாடத்திட்டமே தொடரும் - அமைச்சர் அறிவிப்பு

TNPSC Group 4 பழைய பாடத்திட்டமே தொடரும் – அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் Tamil Nadu Public Service Commission ஆனது வருடம் தோறும் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன்படி, குரூப் 1, குரூப் 4, குரூப் 2 என பல்வேறு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கொரோனா காரணமாக தற்போது அனைத்து தேர்வு பணிகளும் முடங்கி உள்ளன. தேர்வர்கள் அனைவரும் தங்களது தேர்வுக்கு தயாராகி வருகின்ற, நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தற்போது குரூப் 4 பாடத்திட்டம் பற்றி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள்:

இந்த வருட தொடக்கத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இதனால் தேர்வு முறையில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் குறிப்பாக குரூப் 4 தேர்வுகளில் முதற்கட்ட மற்றும் முதன்மை தேர்வு முறைகள் கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) அறிவிக்கை வெளியிட்டது.

TNPSC Group 4 VAO அறிவிப்பு 2020 !

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பழைய பாடத்திட்டம் தொடரும்:

இந்த செய்தி வெளியானதில் இருந்து, பல்வேறு எதிர்ப்புகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதனால் பல தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளலாம் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 இல் பழைய பாடத்திட்டம் தொடரும் எனவும், அதாவது ஒரு எழுத்து தேர்வு மட்டும் நடைபெறும் எனவும், இளைஞர்கள் கவலைப்பட தேவை இல்லை என அறிவித்துள்ளார்.

இந்த செய்து குரூப் 4 தேர்வுக்கு தயராகுபவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!