ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தையின் பெயரை ரேஷன் கார்டில் இணைக்க வேண்டுமென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பயன்படுத்தி உறுப்பினரின் பெயரை எளிமையாக இணைத்துக் கொள்ளலாம்.

ரேஷன் கார்டு:

ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பான் கார்டு போல ரேஷன் கார்டும் முக்கிய ஆவணமாகிவிட்டது. அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் பெறுவதற்கும் ரேஷன் கார்டுகள் மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. அனைத்து நல திட்டத்திற்கும் ரேஷன் கார்டுகள் தேவைப்படுவதால் குடும்ப தலைவரின் பெயர், குடும்ப தலைவியின் பெயர், குழந்தைகளின் பெயர், அனைவரின் வயது மற்றும் வீட்டு முகவரி என அனைத்து தகவலும் பிழை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

TCS, Wipro, Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் வீட்டில் இருந்தே வேலை!

புதிதாக திருமணமானவர்கள் உறுப்பினர் பெயரை உடனே ரேஷன் கார்டில் இணைத்துவிட வேண்டும் மற்றும் புதிதாக குழந்தை பிறந்திருப்பின் அந்த குழந்தையின் பெயர் மற்றும் குழந்தை குறித்தான அனைத்து விவரங்களையும் இணைத்துவிட வேண்டும். இதுமட்டுமல்லாமல் கணவன் மற்றும் மனைவி இருவரும் புதிய ரேஷன் கார்டு துவங்க நினைத்தால் முதலில் வீட்டு ரேஷன் கார்ட்டில் இருந்த பெயரை நீக்க வேண்டும். மேலும், உறுப்பினர் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் பெயரையும் ரேஷன் கார்ட்டில் இருந்து நீக்கிவிட வேண்டும்.

தற்போது எப்படி ரேஷன் கார்டில் புதிதாக பெயர் மற்றும் உறுப்பினர் விவரங்களை இணைப்பது மற்றும் நீக்குவது என்பதை பார்க்கலாம். முதலில், https://tnpds.gov.in/ என்கிற உணவு வழங்கல்துறையின் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று ரேஷன் கார்டில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதனை செய்து கொள்ளலாம். மேலும், இது குறித்தான விவரங்களை அறிய விரும்பினால் (1967 அல்லது 1800-425-5901) என்கிற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!