ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மேரா ரேஷன் ஆப் பற்றிய முக்கிய விவரங்கள்!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மேரா ரேஷன் ஆப் பற்றிய முக்கிய விவரங்கள்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மேரா ரேஷன் ஆப் பற்றிய முக்கிய விவரங்கள்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மேரா ரேஷன் ஆப் பற்றிய முக்கிய விவரங்கள்!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டின் கீழ் உருவாக்கப்பட்ட மேரா ரேஷன் செயலியின் மூலமாக மக்கள் அதிக உதவியை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவற்றை பற்றி முழுமையாக இந்த பதிவில் காணலாம்.

மேரா ரேஷன் ஆப்:

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களையும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு இணைத்துள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள எந்தவொரு குடிமகனும் நாட்டில் எந்த மாநிலத்திலும் தனக்குரிய ரேஷன் பொருட்களை பெற்று கொள்ளலாம். இதற்காக, ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட குடிமகன் மட்டுமே பயோமெட்ரிக் செயல்முறைக்கு செல்ல வேண்டிய நிலை முதலில் இருந்தது. ஆனால் தற்போது குடும்ப உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் சென்று ரேஷன் பொருட்களை பெறலாம்.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – புதிய கால அட்டவணை வெளியீடு!

மத்திய அரசு சமீபத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டின் கீழ் உருவாக்கப்பட்ட மேரா ரேஷன் செயலியை அறிமுகப்டுத்தியுள்ளது. இதனால் மக்கள் அதிக அளவில் பயனடையும் வாய்ப்புகள் உள்ளது. தங்கள் வேலையின் காரணமாக அடிக்கடி நகரம் அல்லது மாநிலத்தை மாற்றுபவர்கள், மேலும் ஒரே நகரத்தில் அடிக்கடி வீடு மாறும் மக்கள் மேரா ரேஷன் ஆப் மூலம் தங்களுக்கு அருகிலுள்ள ரேஷன் கடைகளை கண்டறிந்து அங்கு தங்களுடைய ஒதுக்கீட்டுக்கான ரேஷன் பொருட்களை பெறலாம். மேரா ரேஷன் மொபைல் ஆப் தற்போது 14 மொழிகளில் உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த செயலியின் மூலம் உங்களுக்கு கோதுமை மற்றும் அரிசி எவ்வளவு வழங்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அதன் விலை என்ன, எவ்வளவு பெறப்பட்டது, இன்னும் எவ்வளவு பெற வேண்டும் போன்ற தகவல்களை அறியலாம். ரேஷன் கார்டில் எவ்வளவு வினியோகம் செய்யப்பட்டுள்ளது, வீட்டைச் சுற்றி எத்தனை ரேஷன் டீலர்கள் உள்ளனர். ரேஷன் கார்டு டீலரையும் நீங்களே மாற்றிக் கொள்ளலாம். உங்கள் வீட்டிலிருந்து எந்த டீலர் எவ்வளவு தொலைவில் இருக்கிறார் என்ற தகவலையும் இது வழங்குகிறது. ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மேரா ரேஷன் ஆப் பதிவிறக்கம்:

  • முதலில் இதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் மேரா ரேஷன் என்று பதிவிட்டு தேட வேண்டும்.
  • செயலியை கண்டுபிடித்த பிறகு மொபைல் செயலியில் பதிவு செய்ய விருப்பம் உள்ளது. இதற்கு உங்கள் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட வேண்டும்.

  • நீங்கள் எண்ணை உள்ளீடு செய்தவுடன், உங்கள் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து தகவல்களும் இங்கே காட்டப்படும்.
  • ரேஷன் கார்டுடன் தொடர்புடைய உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் இங்கே காணலாம், அத்துடன் ஆதார் எண்ணும் தெரிவிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!