தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – புதிய கால அட்டவணை வெளியீடு!

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - புதிய கால அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - புதிய கால அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – புதிய கால அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய கல்வி ஆண்டு நாளை முதல் தொடங்க இருக்கும் நிலையில், பள்ளி கல்வி ஆணையர் அவர்கள் பள்ளிகள் செயல்படும் நேரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கால அட்டவணை:

தமிழகத்தில் கொரோனா பேரிடர் பாதிப்பிற்கு பிறகு கடந்த கல்வி ஆண்டில் மிகுந்த பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இடையில் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படவில்லை. தொற்று பரவும் அபாயம் முழுமையாக குறையாமல் இருந்த காரணத்தால் வகுப்புகள் அனைத்தும் சுழற்சி முறையில் அரசு அறிவித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் நடத்தப்பட்டது. தற்போது நோய்த்தொற்று அச்சம் குறைந்து இயல்பு நிலை வந்துள்ளதால் வழக்கம் போல் பள்ளிகள் 8 கால வேலைகளுடன் செயல்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஜூன் 15 முதல் அடுத்த ஆண்டிற்கான வகுப்புகள் துவக்கம்!

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் பள்ளிகள் செயல்பட உள்ள 8 கால அட்டவணையை வகுப்பு வாரியாக வெளியிட்டுள்ளார். இதற்கான அறிக்கையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கால வேளைகள் அந்தந்த பள்ளிகள் தொடங்கும் நேரத்தை அடிப்படையாக கொண்டும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் ஏற்கனவே வெளியிட்டுள்ள 2022-2023ம் கல்வி ஆண்டு நாட்காட்டியிலும் உள்ளவாறு பின்பற்ற வேண்டும். மேலும், 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும் வகையில் வகுப்பு வாரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Download

அரசின் அறிக்கையின் படி, காலை 9:10 மணிக்கு காலை வணக்கத்துடன் ஆரம்பிக்கும் பள்ளிகள் 10 நிமிட இடைவேளைகள் 2 மற்றும் 40 நிமிட உணவு இடைவேளையுடன் மாலை 4:10 மணிக்கு முடிவடைகிறது. குறிப்பாக பள்ளிகளிடன் அமைவிடம், போக்குவரத்துக்கு வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழுக்களுடன் கலந்தாலோசித்து பள்ளி திறக்கும் மற்றும் முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here