விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து பிரேக் எடுத்த மீனா ஹேமா – பாண்டிச்சேரி டூர்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து பிரேக் எடுத்த மீனா ஹேமா - பாண்டிச்சேரி டூர்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து பிரேக் எடுத்த மீனா ஹேமா - பாண்டிச்சேரி டூர்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து பிரேக் எடுத்த மீனா ஹேமா – பாண்டிச்சேரி டூர்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனாவாக நடித்து வரும் நடிகை ஹேமா சீரியலில் இருந்து கிடைத்த பிரேக்கில் பாண்டிச்சேரி சென்றிருந்தார். இந்த சுற்றுப்பயணம் தொடர்பான வீடியோவை ஹேமா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட அது வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

மக்களின் மனம் கவர்ந்த குடும்பப்பாங்கான கதைக்களம் கொண்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் விஜய் டிவியில் சுமார் 800 எபிசோடுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. மற்ற சீரியல் கதைகளை போல அல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியலுக்கு தமிழ் ரசிகர்களிடம் இருந்து எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்து வருகிறது. இத்தொடரில் மீனா என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ பைனலில் இருந்து விலகும் ப்ரியங்கா? ஷாக் ரிப்போர்ட்! ரசிகர்கள் குழப்பம்!

தமிழ் சின்னத்திரை தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டிருக்கும் நடிகை ஹேமா தற்போது விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் காமெடி கலந்த ஒரு வில்லத்தனமான ரோலில் நடித்து வரும் நடிகை ஹேமாவுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். இவரும் மற்ற சீரியல் நடிகர், நகைகளை போலவே சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் சேனல்களில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.19 முதல் விடுமுறை? தீவிர ஆலோசனை!

அந்த வகையில் கடந்த புத்தாண்டு பண்டிகையின் போது கொண்டாட்டத்திற்காக பாண்டிச்சேரிக்கு சென்றிருந்த நடிகை ஹேமா, அங்கு தங்கி இருந்த பேலஸை வீடியோவாக எடுத்து தனது ஹேமாவின் டைரி என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றி இருந்தார். இந்த வீடியோவின் தொடர்ச்சியாக தற்போது பாண்டிச்சேரியில் உள்ள பேரடைஸ் தீவுக்கு தனது குடும்பத்தாருடன் விசிட் செய்துள்ள நடிகை ஹேமா இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!