சென்னையில் மழை கால பாதிப்பை தடுக்க நடவடிக்கை – சென்சார் மூலம் கண்காணிப்பு!

0
சென்னையில் மழை கால பாதிப்பை தடுக்க நடவடிக்கை - சென்சார் மூலம் கண்காணிப்பு!
சென்னையில் மழை கால பாதிப்பை தடுக்க நடவடிக்கை - சென்சார் மூலம் கண்காணிப்பு!
சென்னையில் மழை கால பாதிப்பை தடுக்க நடவடிக்கை – சென்சார் மூலம் கண்காணிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்க புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

கண்காணிப்பு:

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. அதனை தொடர்ந்து இன்று முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த மழை அடுத்த மூன்று மாதங்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இன்று புதுக்கோட்டை விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை, தஞ்சாவூர்,மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் பெய்யும் மழையால் சென்னை மாவட்டம் ஆண்டுதோறும் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் திணறுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

சீனாவில் அமலில் இருக்கும் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை – 28 நகரங்களில் ஊரடங்கு!

Follow our Instagram for more Latest Updates

அதனை தொடர்ந்து அதிக மழை நீர் தேங்கும் இடங்களை சரி செய்ய மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரலையாக கண்காணிக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தற்போது சென்சார்கள் வாயிலாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் கண்டறியப்படவுள்ளது. மேலும் மக்கள் அவசர உதவிகளுக்கு 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!