முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 23

0
144

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 23

  • செப்டம்பர் 4 முதல் 14 வரை தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக ரியோ சபா ஸ்கேட்டர் பங்கேற்றார்.
  • கேரள சுற்றுலா நிறுவனம் ஜடாயு எர்த் சென்டரை ஒரு ‘சர்வதேச சுற்றுலா கலாச்சார மையமாக’ பிரகடனம் செய்யவுள்ளது.
  • கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் மட்டும் பின்னர் ரூ. 6000 மாத உதவித்தொகை  மற்றும் மூத்த குடிமக்களுக்காக மாதம் ரூ .6000 பொது ஓய்வூதியம் வழங்கவுள்ளது.
  • ஒரு புதிய மென்பொருள், ‘நிடான்’, ராஜஸ்தானில் பருவகால மற்றும் தொற்றாத நோய்கள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் நோய்களின் போக்குகள் ஆகியவற்றின் முன்னறிவிப்பு, ஆய்வு மற்றும் கண்காணிப்புக்காக தொடங்கப்பட்டுள்ளது.
  • SC மக்களில் நிலமற்ற தொழிலாளர்கள் விவசாய நிலம் அல்லது இரண்டு ஏக்கர் பாசன நிலத்தை 5% மட்டும் செலுத்தி  வாங்க முடியும். மீதமுள்ள 8 லட்சம் ரூபாய் மாநில அரசால் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • பிரதமர் நரேந்திர மோடி கிழக்குப் புறப்பரப்பு எக்ஸ்பிரஸ்வே என்று அழைக்கப்டும் குண்டில்-கஜியாபாத்-பல்வால் (கே.ஜி.பீ.) எக்ஸ்பிரஸ்வேயை திறந்துவைத்தார்.
  • ஆசியான் – இந்தியா திரைப்பட விழாவை, மத்திய தகவல் & ஒலிபரப்பு மற்றும் விளையாட்டு & இளைஞர் நலத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர், புதுதில்லி, சிரிஃபோர்ட் கலையரங்கில் 2018, மே 25 அன்று தொடங்கிவைத்தார்.
  • கார்ல் மார்க்ஸின் புகழ்பெற்ற புத்தகமான டாஸ் கேப்பிடலின் முதல் வரைவில் ,அவரது கையெழுத்துப் பிரதியின்  ஒரு பக்கம், ஏலத்தில் 5,23,000 டாலர்களுக்கு விற்கப்பட்டது.
  • ஏப்ரல் 2017 யை விட ஏப்ரல் 2018 ல் அந்நியச் செலாவணி வருவாயில் 10.2% வளர்ச்சி அடைந்துள்ளது .
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா மற்றும் அங்கோலா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • 2018 மார்ச் 10ம் தேதி புதுதில்லியில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையில் இந்தியாவும் ஃபிரான்சும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உணவுப் பாதுகாப்புத் துறையில் இந்தியா-டென்மார்க் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையில் இந்தியா – மொராக்கோ ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு, பின்னேற்பு ஒப்புதல் வழங்கப்பட்டது.
  • பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், துருக்கியிலிருந்து கசகசா இறக்குமதி செய்வதில், இந்தியாதுருக்கி இடையே கசகசா வர்த்தகத்தில், விரைவானவெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வகைசெய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பணியாளர் மேலாண்மை மற்றும் பொதுநிர்வாகத் துறைகளில், இந்தியா-சிங்கப்பூர் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி பெங்களூரில் உள்ள தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டலில் இந்தோடச்சு தொடக்க முயற்சிக்கான அதிகாரப்பூர்வ வெளியீடு நடைபெற்றது.
  • போலந்து நாவலாசிரியரான Olga Tokarczuk ,Flights  என்னும் நாவலுக்கான மேன் புக்கர் சர்வதேச பரிசு வென்றார்.
  • ஸ்டேசி கன்னிங்ஹாம் -226ஆண்டு பழமையான நியூயார்க் பங்குச் சந்தையின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • போபால் நகரில் இளைஞர்களுக்கான வேலைகளை வழங்குவதற்காக பஹால் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்தியப் பிரதேச அரசாங்கம் மை எம்.பி. ரோஜ்கார் போர்ட்டலை தொடங்கியுள்ளது.
  • பாங்காக்கில் நடைபெற்ற உபர் கோப்பை பேட்மின்டன் போட்டியில் இந்தியா மூன்றாவது மற்றும் இறுதிப் பிரிவு-A அணியில் ஜப்பானுக்கு எதிராக 5-0 என்ற கணக்கில் தோல்வி கண்டது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here