மாநிலத்தில் நாளை (மார்ச் 23) அரசு விடுமுறை அறிவிப்பு – சூப்பர் உத்தரவு பிறப்பிப்பு!

0
மாநிலத்தில் நாளை (மார்ச் 23) அரசு விடுமுறை அறிவிப்பு - சூப்பர் உத்தரவு பிறப்பிப்பு!
மாநிலத்தில் நாளை (மார்ச் 23) அரசு விடுமுறை அறிவிப்பு - சூப்பர் உத்தரவு பிறப்பிப்பு!
மாநிலத்தில் நாளை (மார்ச் 23) அரசு விடுமுறை அறிவிப்பு – சூப்பர் உத்தரவு பிறப்பிப்பு!

இந்திய இளைஞர்களின் மனதில் சுதந்திர போராட்ட சுடரை ஏற்றி வைத்த வீரர்களில் பகத் சிங் ஒருவராவர். இவரின் உயிர் தியாகம் இளைஞர்களின் மத்தியில் சுதந்திரம் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலும் வலுப்பெற்றது. இப்போது பகத் சிங்கின் நினைவு தினத்தை (மார்ச் 23) முன்னிட்டு அரசு விடுமுறையை பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.

பகத் சிங்

இந்திய விடுதலைக்கு பல்லாயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்கள் தங்களின் உயிரை தியாகமாக கொடுத்துள்ளனர். இதில் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பங்கா பகுதியில் 1907ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி அன்று விடுதலை போராட்ட வீரரான ‘சாஹீது பகத்சிங்’ என அழைக்கப்படும் பகத் சிங் பிறந்தார். அத்துடன் சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் போட்டு “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டார். இதற்காக பிரிட்டிஷ் அரசிடம் தானே முன்வந்து சரணடைந்தார்.

TN TET ஆசிரியர் தகுதித்தேர்வு 2022 – பாடத்திட்டம் & தேர்வு முறை பற்றிய முழு விபரங்கள் இதோ!

அத்துடன் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் ஆங்கில காவலதிகாரி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையை செய்த காவலதிகாரியை பகத் சிங் சுட்டு கொண்டார். இந்த குற்றத்தை மேற்கொண்டதற்கு பகத் சிங்குக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. தனது 24 வயதில் ஆங்கில அரசால் மார்ச் 23ம் தேதி அன்று தூக்கிலிடப்பட்டார். விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனதில் விதைத்திடவும் மற்றும் மேலும் வலுப்படுத்தவும் தன் உயிரையே தியாகம் செய்தார். குறைந்த வயதிலேயே இறந்தாலும் இன்னும் இந்தியர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பஞ்சாப்பின் புதிய முதல் மந்திரியாக ஆம் ஆத்மி வேட்பாளர் பகவந்த் மான் இன்று பதவி ஏற்றார். இவ்விழா பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலன் பகுதியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் பகவந்த் மான் தெரிவித்தாவது, பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த பகத்சிங் நினைவு தினத்தை மார்ச் 23ம் தேதி அன்று அரசு விடுமுறையாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி நாளை அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் அம்மாநில அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!