பக்ரீத் பண்டிகையை நண்பர்களுடன் கொண்டாடிய மணிமேகலை & ஹூசைன் – வைரலாகும் வீடியோ!

0
பக்ரீத் பண்டிகையை நண்பர்களுடன் கொண்டாடிய மணிமேகலை & ஹூசைன் – வைரலாகும் வீடியோ!
பக்ரீத் பண்டிகையை நண்பர்களுடன் கொண்டாடிய மணிமேகலை & ஹூசைன் – வைரலாகும் வீடியோ!
பக்ரீத் பண்டிகையை நண்பர்களுடன் கொண்டாடிய மணிமேகலை & ஹூசைன் – வைரலாகும் வீடியோ!

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் என்பதால் மணிமேகலை மற்றும் ஹூசைன் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி உண்டு ஜாலியாக கொண்டாடும் படியான வீடியோவை மணிமேகலை தனது யூடியூப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மணிமேகலை & ஹூசைன் தம்பதி

சன் ம்யூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ப்ரீயா விடு என்கிற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமாகி அந்த நிகழ்ச்சிக்கு கால் செய்த ஒருவரை காதலித்து திருமணம் செய்தவர் தான் மணிமேகலை. ஆரம்பத்தில், மணிமேகலை ஹிந்து என்பதால் முஸ்லீம் பையனான ஹூசைன்னை திருமணம் செய்ய பல எதிர்ப்புகள் வந்தது. ஆனாலும், கூட இருவரும் காதலில் உறுதியாக இருந்ததால் பெற்றோர்களையும் மீறி திருமணமும் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் திருமணம் செய்துகொள்ளும் போது சொந்தமாக நிலம், வீடு, வேலை என எதுவுமே இல்லை.

Exams Daily Mobile App Download

பின்பு, தான் இருவரும் கஷ்டப்பட்டு உழைத்து சொந்தமாக வீடு கட்டி கொண்டிருக்கின்றனர் மற்றும் ஒவ்வொரு விஷயத்தை தங்களின் காதலுக்காக செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். மேலும், யாருடைய உதவியையும் எதிர்பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து இவ்வளவு உயரத்திற்கு வந்திருக்கிறார்கள். அவ்வப்போது ஹூசைனுடன் வெளியூர் பயணம், உணவு என ஹூசைனுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடங்களையும் மணிமேகலை தனது யூடியூப் பக்கத்தில் பதிவு செய்தபடியே இருக்கிறார். இந்நிலையில், கடந்த வாரம் பக்ரீத் என்பதால் பிரியாணி சாப்பிட்ட கதையை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

கண்ணம்மா மீது பாசத்தை பொழியும் ஹேமா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த கட்ட கதைக்களம்!

அதாவது, ஒரு முஸ்லீம் நண்பன் இருந்தாலும் பக்ரீத் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பிரியாணி கேட்க ஆரம்பித்துவிடுவோம். அதே போல ஹூசைனிடம் அவரது நண்பர்கள் பிரியாணி கேட்டு தொந்தரவு செய்திருக்கின்றனர். இந்நிலையில், மணிமேகலை வீட்டில் பிரியாணி செய்யாமல் இருப்பதே அனைவருக்கும் நல்லது என ஒரு பிரியாணி கடையில் மூங்கில் பிரியாணி வாங்கி கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து பக்ரீத்தை ஜாலியாக கொண்டாடும்படியான வீடியோ தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!