கண்ணம்மா மீது பாசத்தை பொழியும் ஹேமா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த கட்ட கதைக்களம்!

0
கண்ணம்மா மீது பாசத்தை பொழியும் ஹேமா - 'பாரதி கண்ணம்மா' சீரியலின் அடுத்த கட்ட கதைக்களம்!
கண்ணம்மா மீது பாசத்தை பொழியும் ஹேமா - 'பாரதி கண்ணம்மா' சீரியலின் அடுத்த கட்ட கதைக்களம்!
கண்ணம்மா மீது பாசத்தை பொழியும் ஹேமா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த கட்ட கதைக்களம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா தான் தன்னுடைய சொந்த அம்மா என்பதை அறிந்து கொள்ளும் ஹேமா அவரை தாயாக உரிமை கொண்டாடுவது போல வெளியாகி இருக்கும் ப்ரோமோ காட்சிகள் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

பாரதி கண்ணம்மா

டிவி சீரியல்களுக்கு பெயர் போன விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. விஜய் டிவி சீரியல்களில் எப்போதும் டாப் இடத்தை வகித்து வரும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, இத்தொடரின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகர், நடிகைகள் பலர் சீரியலில் இருந்து விலகி இருந்தாலும், இந்த சீரியல் எப்போதும் ரசிகர்களின் கவனம் பெறத்தவறியதில்லை.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் சமீப காலமாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களத்தில் மருத்துவமனை, அறுவை சிகிச்சை என சில சமூக கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அவ்வப்போது பாரதி மற்றும் கண்ணம்மா தொடர்பான காட்சிகளும் சீரியலில் இடம்பிடிக்கிறது. அந்த வகையில் லட்சுமி தனது அப்பா பாரதி என்ற உண்மையை அறிந்துகொள்ள, பாரதி மற்றும் கண்ணம்மாவின் விவாகரத்து விவகாரம் ஹேமாவின் தயவால் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் வெளியான எபிசோடில் ஹேமா, சமையல் அம்மாவின் பெயர் கண்ணம்மா என்பதை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் அமைகிறது.

கோபி மீது புகார் கொடுக்கும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

இதனால், கண்ணம்மா தான் தன்னுடைய அம்மாவாக இருக்குமா என ஹேமா சந்தேகப்படுகிறார். இப்போது தாய் மற்றும் மகளுக்கு இடையே நடைபெறும் பாசப்போராட்டங்களுடன் இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களம் ஒளிபரப்பாக உள்ளது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஹேமா தனது அம்மா கண்ணம்மாவை பார்த்து, அவரை தூக்க வேண்டும் என்று சொல்கிறார். எதற்காக ஹேமா இப்படி சொல்கிறாள் என்பதை அறியாத கண்ணம்மா அவரை தூக்க, ஹேமா கண்ணம்மாவுக்கு முத்தமிடுகிறார். தொடர்ந்து கண்ணம்மாவும் தனக்கு முத்தமிட வேண்டும் என்று ஹேமா சொல்ல கண்ணம்மா தனது மகளுக்கு ஆசை தீர முத்தமிடுவது போல வெளியான ப்ரோமோ காட்சிகள் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!