இன்று முதல் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல் – மலேஷியா அரசு அறிவிப்பு!
மலேஷிய நாட்டில் கடந்த மே மாதத்தில் மிக அதிகளாவிலான கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட காரணமாக தற்போது அங்கு நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
முழு ஊரடங்கு:
இந்தியா மட்டுமல்லாமல் தற்போது உலகம் முழுவதும் கொரோனாவின் பேரலை மக்களை மிக கடுமையாக பாதித்து வருகிறது. கடந்த ஆண்டை விட தற்போது கொரோனா தொற்று மிக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அனைத்து உலக நாடுகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மலேஷிய நாட்டில் கடந்த மே மாதத்தில் கொரோனா நோய்த்தொற்று தீவிரம் அடைய தொடங்கியது.
தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு – உயரும் பலி எண்ணிக்கை!
மலேஷியா அதிக இஸ்லாமிய மக்களை கொண்ட நாடு. இந்நிலையில் அங்கு கடந்த மாதம் ரம்சான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக தற்போது அங்கு கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது என்று கூறப்படுகிறது. நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் 2,800 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பில் 40 சதவிகிதம் கடந்த மே மாதத்தில் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மலேஷியாவை தொடர்ந்து தாய்லாந்து, வியாட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது.
TN Job “FB
Group” Join Now
தற்போது இதனை தொடர்ந்து மலேஷிய நாட்டில் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கின் பொழுது பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் என்றும் மருத்துவ சேவை, சூப்பர் மார்க்கெட் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் மலேஷிய அரசு தெரிவித்தது. மேலும் மலேஷிய மக்கள் ஊரடங்கினை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.