தமிழக அரசின் திட்டங்களை அறிய உதவும் whatsapp – எப்படி? வழிமுறைகள் உள்ளே!

0
தமிழக அரசின் திட்டங்களை அறிய உதவும் whatsapp - எப்படி? வழிமுறைகள் உள்ளே!
தமிழக அரசின் திட்டங்களை அறிய உதவும் whatsapp - எப்படி? வழிமுறைகள் உள்ளே!
தமிழக அரசின் திட்டங்களை அறிய உதவும் whatsapp – எப்படி? வழிமுறைகள் உள்ளே!

தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் குறித்து வாட்ஸ் அப் மூலம் எளிதாக அறியும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் நலன்:

தமிழக அரசு சார்பாக பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கும் வண்ணம் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத்திட்டங்கள் குறித்தும் அதன் பயன் குறித்தும் இன்னும் பல பேருக்கு தெரியவில்லை. அதனால் தகுதியுடைவர்கள் பயன் பெற முடியாமல் உள்ளனர். மேலும், திட்டங்களை அறிந்தாலும் அதன் மூலம் எவ்வாறு பயன் அடைவது என்பது குறித்த விழிப்புணர்வு இல்லை.

Follow our Instagram for more Latest Updates

இதனை கருத்தில் கொண்டு மக்கள் மாநிலம் முழுவதும் உள்ள அரசின் திட்டங்களை whatsapp மூலம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ் அப்பிற்கு “மக்கள் நலன் bot” என பெயரிடப்பட்டுள்ளது. இதனை மக்கள் தங்கள் கைகளில் உள்ள ஸ்மார்ட் போன் வாயிலாக தொடர்பு கொண்டு திட்டங்கள் குறித்து அறியலாம். அதற்கான வழிமுறைகளை குறித்து பதிவில் காண்போம்.

தமிழகத்தில் ஜன.10 மின்தடை செய்யப்படும் பகுதிகள் – மின்வாரிய அறிவிப்பு!

வாட்ஸ் அப் மூலம் அறியும் வகைகள்:
  • “மக்கள் நலன் bot” திட்டத்தின் 99445879944 என்ற வாட்ஸ்அப் எண்ணை முதலில் மொபைல் போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு வாட்ஸ்அப் ஓப்பன் செய்து Hi என மெசேஜ் அனுப்பவும்.
  • அடுத்தாக உங்களது மொழி, பாலினம், சமூகம், மதம், வகை, ஆண்டு வருமானம் ஆகியவற்றைத் தேர்வு செய்யவும்.
  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் வகையை பொறுத்து அதிலுள்ள திட்டங்கள் உங்களுக்கு திரையில் காண்பிக்கப்படும்
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!