40ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – மயில்சாமி அண்ணாதுரை!!

1
40ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - மயில்சாமி அண்ணாதுரை!!
40ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - மயில்சாமி அண்ணாதுரை!!
40ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – மயில்சாமி அண்ணாதுரை!!

தமிழகத்தில் ட்ரோன் நிறுவனம் துவங்குவதால் சுமார் 40ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைப்பதாகவும், வேளாண்மையில் நீர்ப்பாசன மேலாண்மையை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும் என மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

ட்ரோன் நிறுவனம் மூலம் வேலை வாய்ப்பு:

மயில்சாமி அண்ணாதுரை தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர். தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் உபதலைவராகவும் உள்ளார். இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராகப் பணிபுரிந்தார். மேலும் முப்பதுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புக்களை உருவாகுவது தமிழக அரசின் குறிக்கோளாகும். இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா டிச.22 முதல் 25-ம் தேதிவரை நடைபெற உள்ளது. சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், ‘தற்சார்பு இந்தியாவுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்கில் முக்கிய விருந்தினராக விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை உரையாற்றினார்.

ரயில்வே துறையின் சிறப்புகளும் !! அதன் நன்மைகளும்!!

அந்த கருத்தரங்கில் அவர் கூறியது, உலகில் மக்கள் தொகை அதிகரிப்பதால் அவர்களுக்கான உணவு தனியா உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. மேலும், நீர் பற்றாக்குறை போதிய வேலையாட்கள் இல்லாமை போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இந்த மாதிரியான பல பிரச்சனைகள் இந்த வேளாண் தொழிலில் இருக்கிறது.

இதுபோன்ற பிரச்சனைகளை சரிசெய்ய வயலில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் போன்ற வேளாண் பணிகளுக்கு ட்ரோன் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்கள் தற்போது உபயோகிக்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்ப பயன்பாடு மேலும் அதிகரிக்க வேண்டும்.

வாழைத் தண்டிலிருந்து நாரெடுத்து அதிலிருந்து உபயோகப்படுத்துவதற்கு ஏற்றவகையில் பல பொருட்களை தயாரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் வாழை நாறுகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதில்லை. இந்தியாவில் வாழைமரங்கள் உற்பத்தியில் முன்னணி வகிப்பது தமிழ்நாடு. இந்த வாழை நாறில் இருந்து அதிகஅளவு பொருட்கள் தயாரிக்க முடியும் இதை நாம் தான் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

ஐஐடி பாதிப்பு 191ஆக அதிகரிப்பு – தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு??

உலகளவில் வளர்ச்சியை அடைய இந்தியாவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. அதன்படி பாதுகாப்பான தற்சார்பு இந்தியாவை செயற்கைக்கோள்கள் உறுதிசெய்கின்றன. இப்போது உள்ள சூழ்நிலை புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏற்றதாகவே உள்ளது. இருப்பினினும், புதிய கண்டுபிடிப்புகள் சமூகநலனில் அக்கறை கொண்டு கண்டுபிடிக்க வேண்டும். எனவே, அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் முயற்சித்தால் தான் தற்சார்பு உடைய இந்தியா உருவாக்க முடியும்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் ட்ரோன் நிறுவனம் அமைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. ட்ரோன் நிறுவனம் அமைப்பதன் மூலம் 40,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என்றார்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!