“தமிழும் சரஸ்வதியும்” & “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மஹா சங்கமம் – திங்கள் முதல் 1 மணிநேர ஒளிபரப்பு!

0
"தமிழும் சரஸ்வதியும்" & "பாண்டியன் ஸ்டோர்ஸ்" மஹா சங்கமம் - திங்கள் முதல் 1 மணிநேர ஒளிபரப்பு!
“தமிழும் சரஸ்வதியும்” & “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மஹா சங்கமம் – திங்கள் முதல் 1 மணிநேர ஒளிபரப்பு!

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களான “தமிழும் சரஸ்வதியும்” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மஹா சங்கமம் வருகிற திங்கள்கிழமை (நவம்பர் 15) இரவு 7.30 முதல் 8.30 வரை 1 மணிநேரம் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹா சங்கமம்:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் TRPயில் போட்டி போடும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சீரியல்களில் மாற்றம் கொண்டு வரவேண்டும் எனவும் TRP ரேட்டிங்கை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக இரண்டு சீரியல் கதாபாத்திரங்களை ஒன்றிணைத்து மஹா சங்கமம் நடத்தப்படும். மேலும் 1 மணி நேரம் சீரியல்கள் ஒளிபரப்பாக இருப்பதால் மக்களிடம் நல்ல ஆதரவு கிடைக்கும்.

விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் ‘ரோஜா’ சீரியல் – அடுத்தடுத்து அவிழும் கதை முடிச்சுகள்!

அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் டாப் சீரியலான தமிழும் சரஸ்வதியும் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இணைந்து மஹா சங்கமம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த மஹா சங்கமம் வருகிற நவம்பர் 15 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது கார்த்திக், வசு திருமணம் நடைபெற்றுள்ளது.

Vijay TV Bigg Boss Promo 1 | பொம்மை டாஸ்க்கில் குழந்தைத்தனமாக மாறிய போட்டியாளர்கள் – கமல் விமர்சனம்!

அடுத்து கதை எப்படி நகரும் என சஸ்பென்சாக இருக்கிறது. அதே போல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கயல் பாப்பா நட்சத்திர பிறந்தநாள் அன்று சென்னை செல்ல வேண்டும் என ஜாதகத்தில் இருப்பதால் குடும்பத்துடன் அனைவரும் சென்னை செல்கின்றனர். அங்கே தான் சரஸ்வதி தமிழ் குடும்பத்தை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரு குடும்பங்கள் இணைந்து அடுத்து எவ்வாறு கதை அமையும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!