பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் குறைந்த முதலீடு; அதிக வட்டி – அஞ்சலக திட்டம்!

0
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் குறைந்த முதலீடு; அதிக வட்டி - அஞ்சலக திட்டம்!
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் குறைந்த முதலீடு; அதிக வட்டி - அஞ்சலக திட்டம்!
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் குறைந்த முதலீடு; அதிக வட்டி – அஞ்சலக திட்டம்!

அஞ்சலகத்தில் முதிய வயதில் உதவும் வகையில், குறைந்த முதலீட்டில் அதிக வட்டி அளிக்கும் பயனுள்ள பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை பற்றி முழு விவரங்களும் இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது வைப்பு நிதி:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து மாதந்தோறும் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அவசரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு இப்பணத்தை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால், ஊழியர்களுக்கு இத்தொகை மிகப்பெரிய சேமிப்பாக உள்ளது. ஆனால் அமைப்பு சாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு இது போன்ற வைப்பு நிதி திட்டங்கள் வசதி இல்லை.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா – முன்னாள் முதல்வர் அறிவுறுத்தல்!

இதனால் அவர்கள் தங்கள் முதுமை காலத்தில் தங்களின் செலவுகளை நிர்வகிப்பதில் சிக்கல்கள் உள்ளது. இது போன்றவர்களுக்கு உதவும் வகையில் தபால் துறையில் பொது வைப்பு நிதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் இந்த திட்டத்தின் மூலம் ஓய்வூதிய வசதியின் அதிகபட்ச பலனை பெற முடியும். பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வருமானம் மற்றும் வரிச் சலுகைகளும் கிடைக்கும். கணக்கு குறைந்த பட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் செலுத்திக் கணக்கை துவங்கி கொள்ளலாம்.

ஆன்லைன் ஷாப்பிங்கில் கிரெடிட் கார்டுக்கு பதிலாக Card Tokenization சேவை – RBI அறிவிப்பு!

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மார்ச் 31, 2021ம் காலாண்டு வரையில் வட்டி விகிதம் 7.1 சதவீதமாக வழங்கப்படுகிறது. மற்ற நிதி திட்டங்களில் வழங்கப்படும் வட்டி தொகையை விட இது அதிகமாகும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15ஆண்டுகள் ஆகும். பிபிஎஃப் கணக்கைத் துவங்கிய 3வது ஆண்டிலிருந்து கடன் பெறலாம். நிலுவைத் தொகையில் 25% முதல் நிதியாண்டின் இறுதியில் கிடைக்கப்பெறும். பிபிஎஃப் வட்டி விகிதத்திற்கு மேல் கடன் மீதான வட்டி விகிதம் ஆண்டுக்கு 2 % இருக்கலாம். அஞ்சலகம் மூலமாக மட்டுமல்லாமல் இந்த திட்டத்தினை பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!