ஆன்லைன் ஷாப்பிங்கில் கிரெடிட் கார்டுக்கு பதிலாக Card Tokenization சேவை – RBI அறிவிப்பு!

0
ஆன்லைன் ஷாப்பிங்கில் கிரெடிட் கார்டுக்கு பதிலாக Card Tokenization சேவை - RBI அறிவிப்பு!
ஆன்லைன் ஷாப்பிங்கில் கிரெடிட் கார்டுக்கு பதிலாக Card Tokenization சேவை - RBI அறிவிப்பு!
ஆன்லைன் ஷாப்பிங்கில் கிரெடிட் கார்டுக்கு பதிலாக Card Tokenization சேவை – RBI அறிவிப்பு!

ஆன்லைனில் நடைபெற்று வரும் மோசடிகளை தடுக்கும் வகையில் வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யும் போது பயன்படுத்தப்படும் கிரெடிட் கார்டு சேவைக்கு பதிலாக, இனி டோக்கன் முறை அமல்படுத்தப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

டோக்கன் முறை

வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மூலம் எல்லாம் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பிறகு, ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கடவுச்சொல், ரகசிய எண்களை எவ்வளவு தான் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் ஏதோவொரு இடத்தில் மோசடிகளில் சிக்கிவிடுகின்றனர். இதன் மூலம் கஷ்டப்பட்டு சம்பாதித்த மொத்த பணத்தையும் இழந்துவிட நேரிடுகிறது. இவ்வகையான சூழல்களில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் படி வங்கி நிர்வாகங்கள் அவ்வப்போது எச்சரிக்கைகளை கொடுத்து வருகிறது.

மத்திய பாதுகாப்பு படையில் நிரந்தர கமிஷனுக்கு பெண்கள் நியமனம் – மத்திய அரசு அறிவிப்பு!

இதனிடைய வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு மூலம் நடைபெறும் மோசடிகளை குறைக்கும் விதத்தில் இந்த சேவையில் சில முக்கிய மாற்றங்களை அமல்படுத்துவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதன் படி Card Tokenization என்ற டோக்கன் சிஸ்டத்தை வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வருவதாக RBI அறிவித்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் ஆன்லைன் இ-காமர்ஸ் தளங்களில் பொருட்களை வாங்குபவர்களுக்கு கிரெடிட் கார்டுடன் ஒரு டோக்கன் எண் கொடுக்கப்பட இருக்கிறது.

அதன் மூலம் வாடிக்கையாளர்கள் எந்தவொரு ஆன்லைன் தளத்திலும் தங்களது வங்கி பெயர், கிரெடிட் கார்டு எண், கார்டு காலாவதியாகும் நாள், CVV எண் உள்ளிட்ட தகவல்களை கொடுக்க தேவையில்லை. அதனால் அமேசான், பிலிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் வலைதளங்களும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை சேமித்து வைக்க முடியாது. குறிப்பாக மோசடிகளும் தவிர்க்கப்படும். இந்நிலையில் RBI அறிவித்துள்ள டோக்கன் சிஸ்டத்துடன், கிரெடிட் கார்டு உட்பட வங்கி வாடிக்கையாளார்களது அனைத்து விவரங்களும் இணைக்கப்பட்டிருக்கும்.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.176 அதிரடி சரிவு – மாலை நிலவரம்!

அதனால் ஒவ்வொரு முறையும் ஷாப்பிங் செய்யும் போது கிரெடிட் கார்டு எண் மற்றும் CVV எண்களை பதிவிட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக டோக்கன் எண்ணை பயன்படுத்தினால் மட்டுமே போதுமானது. இப்போது வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்த பிறகு, டோக்கன் எண்ணை கொடுத்தால், அந்த எண் வங்கிக்கு அனுப்பப்பட்டு வாடிக்கையாளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு பின்னர் பணத்தை செலுத்துவதற்கான ஒப்புதலை வங்கி வழங்கும். இதன் மூலம் ஆன்லைன் மோசடிகள் குறைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக RBI நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!