தனிநபர் கடன்களுக்கு குறைந்த அளவு வட்டி வீதம் – வங்கி பட்டியல் வெளியீடு!
வங்கிகளில் தனி நபர் கடன்களுக்கு வழங்கப்படும் கடன்களில், வட்டி விகிதம் குறைவாக வசூலிக்கப்படும் வங்கிகளின் விவரம் மற்றும் அதன் வட்டி சலுகைகள் குறித்த விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
வட்டி வீதம்
பொதுத்துறை வங்கிகளில் தனிநபர் கடன்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும்போது, அவற்றை பயன்படுத்திக்கொள்ள தவறினால் முதலுக்கே மோசம் விளைவிக்கும் செயலாக கருதப்படும். அந்த வகையில் வங்கிகள் வழங்கும் தனி நபர் கடன்களில் வட்டி விகிதம் குறைவாக இருப்பின் அவற்றை பயன்படுத்திக்கொள்வது திறமையான செயலாகும். வங்கிகளில் வட்டி விகிதங்கள் மிகக் குறைவாக இருக்கும் பட்சத்தில் தங்க நகை கடன்கள் மற்றும் சொத்துக்கள் மீதான கடன்கள் போன்ற பாதுகாப்பான கடன்களை எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
தமிழகத்தில் E-Pass கட்டுப்பாடுகள் எதிரொலி – வாகன வரத்து குறைவு!
அந்த வகையில் பொது மற்றும் தனியார் வங்கிகளில் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்களை Bankbazaar.com தரவுத் தொகுப்பு விளக்குகிறது. அதன் படி யூனியன் வங்கி 8.90%, சென்ட்ரல் வங்கி 8.90%, பஞ்சாப் நேஷனல் வங்கி 8.95%, இந்தியன் வங்கி 9.05%, பஞ்சாப் &சிந் வங்கி 9.50%, IDBI வங்கி 9.50%, மஹாராஷ்டிரா வங்கி 9.55%, SBI வங்கி 9.60%, பேங்க் ஆப் பரோடா வங்கி 9.75%, UCO வங்கி 10.5% வட்டி விகிதத்தை அளிக்கிறது.
TN Job “FB
Group” Join Now
இந்த தரவுகள் ஜூன் 10 வரை உள்ள அந்தந்த வங்கிகளின் அதிகாரப்பூர்வ வலைதளங்களிலிருந்து சேகரிக்கப்பட்டதாகும். இவை ஐந்து வருட கால கால அவகாசத்துடன் ரூ .5 லட்சம் கடனுக்காக வழங்கப்பட்ட வட்டி வீதத்தின் அளவாகும். இந்த வங்கிகளில் வாங்கப்படும் கடன்களுக்கு செயலாக்கம் மற்றும் பிற கட்டணங்கள் பூஜ்ஜியமாக கருதப்படுகிறது.