மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கிடையாது – அமைச்சரவை முடிவு!

0
மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கிடையாது - அமைச்சரவை முடிவு!
மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கிடையாது - அமைச்சரவை முடிவு!
மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கிடையாது – அமைச்சரவை முடிவு!

தெலுங்கானா மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக சுகாதார அமைச்சர் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளதை அடுத்து மாநிலத்தில் இனி ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டாம் என்று அமைச்சரவை தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு:

தெலுங்கானா மாநிலத்தில் கோவிட் வைரஸ் நிலைமை குறித்து ஆய்வு செய்ய நேற்று பிரகதி பவனில் மாநில அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடத்தியது. ஆலோசனை கூட்டத்தின் முடிவில், தற்போது நோய் தொற்று பரவல் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதால் இரவு ஊரடங்கு மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று முடிவு செய்திருப்பதாக திகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மாநிலத்தில் கோவிட்-19 நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், எந்தச் சூழலையும் சமாளிக்க சுகாதாரத்துறை தயாராக இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் டி. ஹரீஷ் ராவ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மீண்டும் முறைகேடு? அடுக்கடுக்கான புகார்!

தெலுங்கானாவில் இதுவரை ஐந்து கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். மீதமுள்ள தகுதியானவர்களுக்கு சுகாதாரத் துறை விரைவில் தடுப்பூசிகளை வழங்கவுள்ளது என்றும் கூறினார். நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளின் உதவியுடன் தடுப்பூசி திட்டத்தை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சரவை உத்தரவிட்டது. தடுப்பூசி திட்டத்தை முடிக்க அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் அமைச்சர்கள் கூட்டம் நடத்த வேண்டும் என்று முதல்வர் கே.சந்திரசேகர ராவ் கேட்டுக் கொண்டார்.

IND VS SA: ரோஹித்துக்கு பதில் ஓப்பனிங்கில் களம் இறங்குவேன் – KL ராகுல் உறுதி!

சமீபத்தில் நடந்த காரீஃப் நெல் கொள்முதல் குறித்தும் அமைச்சரவை ஆய்வு செய்தது. ஏற்கனவே நெல் கொள்முதல் முடிந்துவிட்டதாகவும், பருவமழை காரணமாக சில மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்கள் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நெல் முழுவதும் கொள்முதல் செய்யப்படும் வரை கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் வனப் பல்கலைக்கழகம் அமைப்பது, சித்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (எஃப்சிஆர்ஐ) மாணவர்களுக்கு இடஒதுக்கீடு, வனத் துறையில் நேரடி ஆட்சேர்ப்புத் தேர்வு மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள், 25 சதவீத இடஒதுக்கீடு ஆகியவை குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here