தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் பெற்றவர்களது கடன் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி, ஒரு மாத காலத்திற்குள் தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் விருதுநகர் மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி மேல்முறையீட்டு மனுக்களை வழங்கலாம் என்று கூட்டுறவு இணைப்பதிவாளர் கூறியுள்ளார்.

மேல் முறையீட்டு

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் வரை உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி, அவர் ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் தங்க நகைக்கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நகை கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் இதில் அதிகமான நபர்கள் மோசடிகளில் ஈடுபட்டது அரசுக்கு தகவல் தெரிய வந்தது.

TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – TET பாடத்திட்டம் டவுன்லோட் செய்வது எப்படி?

அதன்படி தகுதியுள்ள பொது நகைக்கடன்களை ஆய்வு செய்ததில் 48,84,726 நகைக்கடன்கள் 35,37,693 கடன்களுக்கு மட்டும் அரசாணையில் உள்ள நிபந்தனைகளின்படி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் நகைக்கடன் பெற்றவர்களில் 75 சதவீத பயனாளிகளுக்கு தள்ளுபடி கிடையாது என அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த செயலால் பல லட்ச தகுதி உள்ளவர்கள் கடனாளியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு துறை நகைக்கடன் வழங்கும் கூட்டுறவு நிறுவனங்களில் தமிழக அரசின் ஆணையின்படி பொது நகைக்கடன் தள்ளுபடி திட்டம் 2021-ன் கீழ் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகள் பட்டியல் https://virudhunagar.nic.in என்ற இணையதளத்திலும் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வலைதளமான www.vrdccbank.in-லும் 8.4.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி தள்ளுபடிக்கு தகுதியான பட்டியல் வலைதளத்தில் வெளியிடப்பட்ட 8.4.2022 முதல் 7.5.2022 வரை ஒருமாத காலத்திற்குள் தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் தங்களின் ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை தொடர்புடைய கூட்டுறவு சங்கங்களுக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணை பதிவாளர் அலுவலகங்களில் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!