TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – TET பாடத்திட்டம் டவுன்லோட் செய்வது எப்படி?

0
TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - TET பாடத்திட்டம் டவுன்லோட் செய்வது எப்படி?
TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - TET பாடத்திட்டம் டவுன்லோட் செய்வது எப்படி?
TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – TET பாடத்திட்டம் டவுன்லோட் செய்வது எப்படி?

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்குரிய அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தாள் – I மற்றும் தாள் -II பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்து குறித்த விவரங்களை பார்ப்போம்.

ஆசிரியர் தகுதித்தேர்வு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடத்திற்கு இத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – கார்டுகள் ரத்து! இதற்காக தான்?

மேலும் தற்போது 15000 இடங்கள் காலியாக உள்ளதாகவும், முதற்கட்டமாக 9000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவித்துள்ளார். TET தேர்வு 2 தாள்களைக் கொண்டது. இதில் தாள்-I ஜூன் 27ம் தேதி அன்றும் மற்றும் தாள் – II ஜூன் 28ம் தேதி அன்றும் நடைபெறலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள்-I மற்றும் தாள் – II பாடத்திட்டத்தை தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்:

1. இதற்கு முதலாவதாக http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. தற்போது இதில் TAMILNADU TEACHER ELIGIBILITY TEST என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. இப்போது புதிய விண்டோ திரையில் தோன்றும். இதில் டீட்டைல்டு சிலபஸ் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.

4. இதில் பேப்பர் 1 என்பதை கிளிக் செய்யும்போது சிலபஸ் பிடிஎஃப் பைல் OPEN ஆகும்.

5. இதனை தங்களின் மொபைல் அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!