தமிழகத்தில் எல்.கே.ஜி வகுப்புகள் மூடல் – பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம்! கல்வித்துறை திட்டம்!

0
தமிழகத்தில் எல்.கே.ஜி வகுப்புகள் மூடல் - பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம்! கல்வித்துறை திட்டம்!
தமிழகத்தில் எல்.கே.ஜி வகுப்புகள் மூடல் - பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம்! கல்வித்துறை திட்டம்!
தமிழகத்தில் எல்.கே.ஜி வகுப்புகள் மூடல் – பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம்! கல்வித்துறை திட்டம்!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்புகளை ரத்து செய்ய உள்ளதாக பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதையடுத்து தற்போது எல்.கே.ஜி வகுப்பிற்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு இட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

எல்.கே.ஜி வகுப்புகள்

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. மேலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள், அங்கன்வாடி, பால்வாடி உள்ளிட்ட குழந்தைகளுக்கான வகுப்புகள் கடந்த 16ம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்த குழந்தைகளுக்கான பள்ளிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்புகளை ரத்து செய்ய உள்ளதாக முடிவு எடுத்துள்ளது.

தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

கடந்த ஆட்சி காலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளை ஒருங்கிணைந்த கல்வி வளாகமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் மேல்நிலை பள்ளிகள் துவக்கப்பட்டு அத்துடன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இணைக்கப்பட்டன. அத்துடன் குழந்தைகளுக்கான எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளும் இணைக்கப்பட்டன. இதையடுத்து 2,381 அங்கன்வாடிகளும் அருகில் இருக்கும் தொடக்க பள்ளிகளுடன் இணைக்கப்பட்டது. மேலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி உள்ளிட்ட வகுப்புகளுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பாடங்களை எடுக்கும்படி அரசு உத்தரவு பிறப்பித்தது.

சென்னை: ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இதற்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. ஆனாலும் ஆசிரியர்கள் பணி நிரவல் அடிப்படையில் பணி மாற்றம் செய்யப்பட்டன. தற்போது எல்.கே.ஜி, யு.கே.ஜி உள்ளிட்ட வகுப்புகள் ரத்து செய்ய உள்ளதால் மீண்டும் ஆசிரியர்கள் முந்தைய பணியிடத்திற்கே நியமிக்கபடுவார்கள் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் அடுத்த கல்வி ஆண்டில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்களுக்கான சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி ரத்து செய்யப்பட உள்ளதால் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்பில் சேர்க்க உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!