ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டும் உலக நாடுகள் – முழு பட்டியல் இதோ!

0
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டும் உலக நாடுகள் - முழு பட்டியல் இதோ!
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டும் உலக நாடுகள் - முழு பட்டியல் இதோ!
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டும் உலக நாடுகள் – முழு பட்டியல் இதோ!

உலக நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில் உக்ரைன் மீது தொடர்ச்சியாக போர் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக சில வல்லரசு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி ஆதரவு கொடுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் காணலாம்.

உக்ரைன் போர்

இன்றுடன் (மார்ச்.1) 6வது நாளாக உக்ரைன் மீது படையெடுப்பை நடத்தி வரும் ரஷ்யா, அந்த நாட்டின் பல பகுதிகளில் குண்டு வீசி பெரியளவு சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்யாவை விட ராணுவப்படையில் பலம் குறைந்ததாக காணப்பட்டு வரும் உக்ரைன் இந்த தாக்குதலை எதிர்த்து போராட முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இந்த போருக்கு முடிவு கட்டும் விதமாக நேற்று (பிப்.28) இரண்டு நாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. என்றாலும் இதற்கு இன்னும் ஒரு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – இனி இலவசமாக செல்லலாம்!

அந்த வகையில் இன்றும் 6வது நாளாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் தீவிரமடைந்து வருகிறது. இப்போது உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவங்களை அனுப்பி போரில் ஈடுபடவில்லை என்றாலும், சில உலக நாடுகள் உக்ரைன் அரசுக்கு போராயுதங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக ரஷ்யாவுக்கு எதிராக இந்த நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தும் வருகிறது குறிப்பிடத்தக்கது. இப்போது ரஷ்யாவின் படைகளை சமாளிக்கும் வகையில் உக்ரைனுக்கு ஆதரவாக ஜெர்மனி அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

அதாவது, ஆண்டி-டேங்க் மிசைல், ஏர் டிபன்ஸ் கன்ஸ், 14 பாதுகாப்பு ஆர்மர்டு வாகனங்கள் 1000 ஆண்டி-டேங்க் ஆயுதங்கள், 400 RPG ஆயுதங்கள் மற்றும் தரையிலிருந்து தாக்கும் 500 ஸ்ட்ரிங்கர் மிசைல்கள் ஆகியவற்றை வழங்கி இருக்கிறது. இதனால் வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதில்லை என்ற கொள்கையையும் ஜெர்மனி மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது. அடுத்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 350 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புமிக்க ஆயுதங்கள், ஜாவ்லின் ஆண்டி-டேங்கர் ஆயுதம், வானூர்திகளை தாக்கும் ஸ்ட்ரிங்கர் மிசைல் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து பிரிட்டன் சார்பில் ஆண்டி-டேங்க் ஆயுதங்கள் மற்றும் 1000 NLAW ஆண்டி ஆர்மர் சிஸ்டங்கள் ஏற்கனவே உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 30 ராணுவ அதிகாரிகளை உக்ரைனுக்கு அனுப்பி மிசைல்களை கையாள்வது குறித்த பயிற்சியை அளிக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுறுத்தி இருக்கிறார். தவிர, பின்லாந்து அரசு 2500 துப்பாக்கிகள், 1,50,000 தோட்டாக்கள், 1500 ஆண்டி-டேங்க் ஆயுதங்கள், கவச உடைகள், ஹெல்மெட், முதலுதவி உபகரணங்கள் மற்றும் 70 ஆயிரம் உணவு பொட்டலங்களையும் உக்ரைனுக்கு அனுப்பி இருக்கிறது.

TN TRB தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு நியமன தேர்வு ரத்து? வலுக்கும் கோரிக்கை!

இதே போல 2000 மெஷின் கன்கள் மற்றும் 3800 டன் எரிபொருளை அளிக்க பெல்ஜியம் அரசு முடிவு செய்துள்ளதாகவும், 2 விமானங்கள் முழுவதும் ஆயுதங்களை கிரீஸ் அரசாங்கம் கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், நார்வே மற்றும் நெதர்லாந்து அரசும் ராக்கெட் மற்றும் ஸ்ட்ரிங்கர் ஆயுதங்களை அனுப்பி இருக்கிறது. குறிப்பாக, உக்ரைனுக்கு தேவையான போர் விமானங்களை அனுப்ப ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன்வந்துள்ளதாக ட்வீட் மூலம் தகவல் அளித்திருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!