திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – இனி இலவசமாக செல்லலாம்!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் - இனி இலவசமாக செல்லலாம்!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் - இனி இலவசமாக செல்லலாம்!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – இனி இலவசமாக செல்லலாம்!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கடந்த 25 ஆம் தேதி தரிசனம் செய்ய வேலூரில் இருந்து இலவச பயண சேவையை எம்.எல்.ஏ நந்தகுமார் தொடங்கி வைத்தார். இந்த சேவை மார்ச் 1 ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில்:

கொரோனா தொற்றின் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய மக்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் ஒரு சில கால கட்டத்திற்கு பிறகு ஊரடங்கில் நிறைய தளர்வுகளை தெலுங்கானா மாநிலம் கொண்டு வந்தது. அதனை பயன்படுத்தி திருப்பதி தேவஸ்தானனும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் டிக்கெட்களை விநியோகம் செய்து வந்தனர். ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்கள் விற்று வருகிறது. ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 300 எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

TN TRB தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு நியமன தேர்வு ரத்து? வலுக்கும் கோரிக்கை!

இதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார். மேலும் இவர் அடுத்த 19 மாதங்கள் இந்த பதவியில் இருப்பார். இவர் தற்போது தனது சொந்த செலவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு சிறந்த காரியம் ஒன்றை செய்து உள்ளார். அந்த சிறப்பான காரியம் என்னவென்றால், பொதுமக்கள் இலவசமாக திருப்பதிக்கு செல்ல பேருந்து சேவையை கடந்த 25ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த இலவச பேருந்து சேவையை பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவிலில் இருந்து எம்.எல்.ஏ நந்தகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு – இனி எவ்வித சலுகைகளும் கிடையாது! அதிரடி உத்தரவு!

இந்த சேவை மார்ச் 1 ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. இதுமட்டுமில்லாமல், இதற்காகவே 12 பேர் பயணம் செய்யக்கூடிய வேன் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். இந்த வாகனம் வேறு எதற்கும் பயன்படுத்தப்படாது எனவும் கூறியுள்ளார். மார்ச் 1-ந்தேதி முதல் வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து இந்த வாகனம் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்குள் மறுபடியும் வேலூருக்கு திரும்பும். அந்த வாகனத்தில் குறைந்த இடவசதி மட்டுமே இருப்பதால் ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது 2 பேர் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்படும். மேலும் இலவச தரிசனத்தில் பயணம் செய்ய விரும்புவார்கள் முன்னே தங்களது ஆதார் விவரங்களை வேலூர் திமுக அலுவலகத்தில் அளித்து பதிவு செய்து கொள்ளலாம். 300 ரூபாய் டிக்கெட்டில் வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு எம்.எல்.ஏ தனது உரையில் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!