லைசென்ஸ், ஆர்சி செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!

0
லைசென்ஸ், ஆர்சி செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு!
லைசென்ஸ், ஆர்சி செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு!
லைசென்ஸ், ஆர்சி செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!

நாடு முழுவதும் வாகன ஓட்டுநர் உரிமம், பதிவு சான்றிதழ் போன்ற வாகன அனுமதி தொடர்பான அனைத்து ஆவணங்களும் அக்டோபர் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு:

கடந்த 2020 மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சம் இருந்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நோய் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டு வருகிறது. நோய் பரவலை தடுக்க பல முக்கிய பணிகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலங்களில் அரசின் அத்தியாவசிய துறைகள் மட்டுமே செயல்பட்டு வந்தது. வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழங்கும் ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்படவில்லை.

தமிழக அரசு சார்பில் ஆன்லைன் மூலம் சாதி சான்றிதழ் – நீதிமன்றத்தில் விளக்கம்!

இதனால் கடந்த ஆண்டு முதல் வாகன ஓட்டுநர் உரிமம், ஆர்சி போன்ற அனைத்து ஆவணங்களும் செல்லுபடியாகும் காலம் படிப்படியாக நீடிக்கப்பட்டு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பெருந்தொற்று காலத்தில் மக்கள் பாதுகாப்பு மட்டுமே முக்கிய என்று மத்திய அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. இதனால் கடந்த மார்ச் முதல் காலாவதியான ஆவணங்களை புதுப்பிக்க அதிக காலஅவகாசம் அளித்து வருகிறது. இந்நிலையில், இறுதியாக செப்டம்பர் 30ம் தேதி வரை வாகன உரிமம் ஆவணங்கள் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது மேலும், ஒரு மாதம் வாகன பதிவுச் சான்றிதழ் (ஆர்சி) லைசென்ஸ், தகுதிச் சான்று போன்ற ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவானது மோட்டார் வாகனச் சட்டம் 1988 மற்றும் மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – மோசடி கும்பல் எச்சரிக்கை!

முன்னதாக, 15 ஆண்டுகளை கடந்த வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாகனப்பதிவு சான்றிதழ் பெற வேண்டும். ஆனால் மத்திய அரசின் புதிய அறிவிப்பின் படி 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படும் வணிக ரீதியான வாகனங்கள் 62 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி சான்றிதழ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!