புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் கல்வி டிவியில் ஒளிப்பரப்பு – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

0
புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் கல்வி டிவியில் ஒளிப்பரப்பு - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் கல்வி டிவியில் ஒளிப்பரப்பு - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
புதிய கல்வியாண்டுக்கான பாடங்கள் கல்வி டிவியில் ஒளிப்பரப்பு – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

தமிழகத்தில் புதிய கல்வி ஆண்டு பாடங்கள் கற்பித்தல் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கல்வி டிவிக்கான புதிய பாட தொகுப்பை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். மேலும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கினார்.

புதிய கல்வி ஆண்டு:

தமிழகத்தில் 2020-2021ம் கல்வியாண்டு முடிவடைந்து, 2021- 2022 க்கான புதிய கல்வியாண்டு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் முதல் அலையின் காரணமாக கடந்த கல்வி ஆண்டு நேரடி வகுப்பு முறையில் நடைபெறவில்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலும், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி டிவி வாயிலாகவும் பாடங்கள் கற்பிக்கப்பட்டது.

அரசு அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயக்கம் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில், கடந்த கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் நடத்தப்படாமல் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு முறை நிர்ணயிக்கப்பட்டு மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டிற்கான பாடங்களை மாவட்ட வாரியாக பிரித்து கல்வி டிவிக்கான வீடியோ பாடமாக தயாரிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

இந்த வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டது. தமிழகத்தில் புதிய கல்வியாண்டு இன்று முதல் தொடக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ள நிலையில், 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாடங்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தொகுப்பை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். புதிய கல்வி அமர்விற்கான பாடபுத்தகங்களை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!