ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! 2972 காலிப்பணியிடங்கள்!

0
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! 2972 காலிப்பணியிடங்கள்!
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! 2972 காலிப்பணியிடங்கள்!
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! 2972 காலிப்பணியிடங்கள்!

கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கிழக்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலானோர் தங்களின் வேலைகளை இழந்தனர். அத்துடன் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியாத நிலை இருந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கிழக்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள 2,972 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு மே 2 முதல் கோடை விடுமுறை தொடக்கம் – கல்வித்துறை அறிவிப்பு!

இதற்கு விண்ணப்பிக்க 15 வயது முதல் 24 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்விகளில் 50% மதிப்பெண்கள் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர்கள் என்சிவிடி அல்லது எஸ்சிவிடி போன்ற அமைப்புகள் விநியோகிக்கும் தேசிய வர்த்தகச் சான்றிதழ்களை பெற்றவராக இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் வைத்திருக்க வேண்டும்.

அத்துடன் 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் ஸ்கேன் செய்த நகல்களை வைத்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் என்சிவி அல்லது எஸ்சிவிடி அமைப்பில் பெற்ற ஐடிஐ சான்றிதழ்களையும் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் கிழக்கு ரயில்வே மண்டலத்தின் அதிகாரப்பூர்வ www.rrcer.com என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. ஆனால் இதில் SC/ST பிரிவினர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இதற்கு விண்ணப்பிக்க வருகிற மே 10ம் தேதியுடன் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!