தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – அரசாணை வெளியீடு!

0
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு - அரசாணை வெளியீடு!
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு - அரசாணை வெளியீடு!
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கொள்கை திருத்தம் செய்யப்பட்ட புதிய விதிகள் அடங்கிய அரசாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கலந்தாய்வு:

தமிழகத்தில் கடந்த 2 வருடமாக பரவிய கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் திறக்கப்படவில்லை அதனால் வருடம் தோறும் ஆசிரியர்களுக்கு நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு இரண்டு வருடங்களாக நடைபெறவில்லை. இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. அதனால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும் சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளது. இந்த காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நடப்பது ஆண்டில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – மார்ச் 2 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!

இது குறித்து ஆலோசிக்கப்பட்டு பொது மாறுதல் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியானது. மேலும் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜனவரி 24ம் தேதி முதல் இடமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு தொடங்கியது. பொது மாறுதல் கலந்தாய்வுக்கான விதிமுறைகளும் வெளியிடப்பட்டது. 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வெளியிடப்பட்டது.

அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்க மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி முடிவு!

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை பொது மாறுதல் கலந்தாய்வு புதிய விதிமுறையை வெளியிட்டுள்ளது. பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தற்போதைய பணியிடங்களில் கட்டாயம் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விடுமுறையை நிர்வாக நிர்வாக மாறுதலுக்கும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் பிப்ரவரி 11,12 ஆகிய தேதிகளில் நடைபெற வேண்டிய கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!