CBSE 8 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அறிவியல் சவால் போட்டி!

0
CBSE 8 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அறிவியல் சவால் போட்டி!
CBSE 8 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அறிவியல் சவால் போட்டி!
CBSE 8 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அறிவியல் சவால் போட்டி!

CBSE பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய இடைநிலை வாரியம் அறிவியல் சவால் என்ற நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த அறிவியல் சவால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் தங்களது விபரங்களை பதிவு செய்யலாம்.

அறிவியல் சவால்:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் CBSE பள்ளி பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. அவ்வாறு பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கற்றல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய இடைநிலை வாரியம் CBSE பள்ளியில் 8 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய அறிவியல் சார்ந்த அறிவை புகட்டும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு – காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு!

அந்த வகையில் அறிவியல் சவால் (Science Challenge) என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜன.17ம் தேதி முதல் பிப்.28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள் DIKSHA தளத்தின் வாயிலாக கலந்து கொள்ளலாம். இந்த அறிவியல் சவால் நிகழ்ச்சியில் CBSE பள்ளியுடன் இணைந்த பள்ளிகள் முதலில் தங்களது பள்ளி மாணவர்களின் பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதற்கான ID CBSE வழங்க வேண்டும். பின்னர் அதனை பயன்படுத்தி மாணவர்கள் DIKSHA இணையதளத்தில் Science Challenge என்ற பாடத்திட்டத்தில் பங்குபெறலாம்.

மாநில அரசு ஊழியர்களுக்கு 10.01% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!

இதற்கு பதிவு செய்ய கட்டணம் ஏதும் கிடையாது. CBSE உடன் இணைக்கப்படாத பள்ளிகள் நேரடியாக DIKSHA இணையதளத்தில் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். அறிவியல் சவாலில் பங்கேற்பு சான்றிதழ் பெற்ற ஒவ்வொரு வகுப்பிலும் 5 மாணவர்கள் வீதம் பள்ளிகள் நேரடியாக இரண்டாம் நிலை அல்லது ராமன் யங் சயின்ஸ் இன்னோவேட்டர் விருதுகளின் தேசியத் தகுதிக்கு பரிந்துரைக்கலாம். இந்த நிகழ்ச்சிக்கு விண்ணப்பிக்க CBSE உடன் இணைந்த பள்ளிகள் cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்த பின்னர் மாணவர்கள் அந்த வினாடி வினாவில் கலந்து கொண்டு விவரங்களை நிரப்பலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!