தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.25,000 பரிசுடன் ‘கவிமணி விருது’ – டிச.31ம் தேதி கடைசி நாள்!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.25,000 பரிசுடன் 'கவிமணி விருது' - டிச.31ம் தேதி கடைசி நாள்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.25,000 பரிசுடன் 'கவிமணி விருது' - டிச.31ம் தேதி கடைசி நாள்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.25,000 பரிசுடன் ‘கவிமணி விருது’ – டிச.31ம் தேதி கடைசி நாள்!

தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களின் எழுத்தார்வத்தை தூண்டும் விதமாக சிறப்பாக கட்டுரை எழுதும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகை, கேடயம் மற்றும் கவிமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கவிமணி விருது:

தமிழகத்தில் 18 வயதிற்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் ஒவ்வொரு ஆண்டும் 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு வழங்கப்படும். அவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.25 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும். மேலும் கேடயம் மற்றும் கவிமணி விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளருக்கான போட்டி நடத்த அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – கனமழையால் சாலைகள் மூடல்!

அதாவது 2021 – 22 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கையில் குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் விதமாக 18 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் மூன்று பேரை இந்த ஆண்டும் தேர்வு செய்து அவர்களுக்கு உரிய பரிசுத்தொகை, கேடயம் மற்றும் விருது வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இதனை செய்லபடுத்தும் விதமாக பொதுநூலக இயக்ககம் இளம் எழுத்தாளர்களிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுவதாக இன்று செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்ப படிவத்தினை  www.tamilnadupublicliraries.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மத்திய அரசு – பிரதமர் மோடி அறிவிப்பு! முடிவுக்கு வந்த ஒரு ஆண்டுகால போராட்டம்!

மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை [email protected] என்ற பொது நூலக இயக்கக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் பொது நூலக இயக்கம், 737/1, அண்ணா சாலை, சென்னை – 600002 என்ற முகவரிக்கு தபால் மூலமும் அனுப்பலாம். விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விபரங்கள் அறிய குழுவின் ஒருங்கிணைப்பாளரை 9941433630 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!