வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மத்திய அரசு – பிரதமர் மோடி அறிவிப்பு! முடிவுக்கு வந்த ஒரு ஆண்டுகால போராட்டம்!

0
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மத்திய அரசு - பிரதமர் மோடி அறிவிப்பு! முடிவுக்கு வந்த ஒரு ஆண்டுகால போராட்டம்!
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மத்திய அரசு - பிரதமர் மோடி அறிவிப்பு! முடிவுக்கு வந்த ஒரு ஆண்டுகால போராட்டம்!
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மத்திய அரசு – பிரதமர் மோடி அறிவிப்பு! முடிவுக்கு வந்த ஒரு ஆண்டுகால போராட்டம்!

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட 3 முக்கிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கிட்டதட்ட ஒரு ஆண்டாக போராட்டம் செய்து வந்த நிலையில் அந்த சட்டங்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது.

வேளாண் சட்டங்கள்

கடந்த ஆண்டில் உலக நாடுகளின் கவனம் ஈர்த்திருந்த ஒரு முக்கிய பிரச்சனை, இந்தியாவில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் தான். அதாவது மத்திய அரசு அமல்படுத்திய, விவசாயிகள் விளைபொருள் வர்த்தக மேம்பாடு மற்றும் வசதி, விளைபொருள் விலை உத்தரவாதத்துக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் அதிகாரமளித்தல், விவசாய சேவை மசோதா ஆகிய 3 முக்கிய வேளாண் சட்டங்களை எதிர்த்து வட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான 2 திட்டங்கள் அறிமுகம் – மிஸ் பண்ணாம படிங்க!

இந்த போராட்டமானது இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தீவிரமடைந்து பின்னர் கலவரமாக மாறிய நிலையில் போராட்டக்காரர்கள் டெல்லி செங்கோட்டையை முற்றுகை செய்தனர். இந்த சம்பவம் குடியரசு தினத்தன்று நடைபெற்றதால் இந்நிகழ்வு உலக நாடுகளின் கவனம் ஈர்த்திருந்தது. இதையடுத்து இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக பலர் குரல் எழுப்பி வந்த நிலையில், மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்டமாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசுடன் உடன்பாடு ஏற்படாத நிலையில், விவசாயிகள் தங்களது போராட்டங்களில் உறுதியாக இருந்தனர். இப்படி மழை, வெயில், குளிர் என்று பாராமல் சுமார் 1 ஆண்டாக போராடி வந்த விவசாயிகளுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 3 முக்கிய வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

SMS மூலமாக ஆதார் சேவைகளை பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ! UIDAI அறிவிப்பு!

அந்த வகையில் விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பிரதமர் மோடி, போராட்டத்தை கைவிடும்படி விவசாயிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். பிரதமரின் இந்த முடிவு விவசாய மக்களிடம் இருந்து வரவேற்பை பெற்று வருகிறது. இருந்தாலும் அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேச மாநிலங்களில் நடைபெறும் தேர்தலை கருத்தில் கொண்டு தான் இத்தகைய அறிவிப்புகள் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!