இந்தியன் ஏர் போர்ஸ் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

0
இந்தியன் ஏர் போர்ஸ் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
இந்தியன் ஏர் போர்ஸ் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
இந்தியன் ஏர் போர்ஸ் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்தியன் ஏர் போர்ஸ் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு மற்றும் மெடிக்கல் அசிட்டேன்ட் டிரேடு (டிப்ளமோ/BSC ) பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு ஏர்போர்ஸ் ஸ்டேஷன் , தாம்பரம் , சென்னையில் 01.02.2023 & 02.02.2023 தேதியில் மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு பணிக்கும் 07.02.2023 & 08.02.2023 தேதியில் மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு (டிப்ளமோ/BSC ) பணிக்கும் நேர்முகத்தேர்வு ( Rally ) காலை 6 மணி முதல் காலை 10:00 மணி வரை நடைபெறும் என தற்போது வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு – அதிரடி உத்தரவால் அதிகாரிகள் வருத்தம்!

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த பணிக்கான வயது வரம்பு குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதில் மெடிக்கல் அசிட்டேன்ட டிரேடு பணிக்கு திருமணமாகாத ஆண்கள் 17 முதல் 21 வயதிற்குள் அதாவது 7.06.2002 முதல் 27.06.2006 க்குள் பிறந்திருக்க வேண்டும் . மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு (டிப்ளமோ/BSC ) பணிக்கு திருமணமாகாத ஆண்கள் 19 முதல் 22 வயதிற்குள் அதாவது 27.06.1999 முதல் 27.06.2004 க்குள் பிறந்திருக்க வேண்டும். திருமணமானவர் 19 வயது முதல் 21 வயதிற்குள் அதாவது 27.06.1999 முதல் 27.06.2002க்குள் பிறக்க வேண்டும்.

மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு பணிக்கான கல்வித்தகுதியாக ப்ளஸ் 2 தேர்ச்சி மற்றும் இயற்பியல் , வேதியியல் , உயிரியல் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவில் 50 % மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு (டிப்ளமோ/BSC ) பணிக்கு கல்வித்தகுதியாக டிப்ளமோ பார்மசி அல்லது பிஎஸ்சி படித்திருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட கல்வித்தகுதி, வயது வரம்பு உடைய காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஏர்போர்ஸ் ஸ்டேஷன், தாம்பரம், சென்னையில் நேரில் சென்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!