நடப்பு நிகழ்வுகள் – 27 ஜூன் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 27 ஜூன் 2023
நடப்பு நிகழ்வுகள் - 27 ஜூன் 2023
நடப்பு நிகழ்வுகள் – 27 ஜூன் 2023

தேசிய செய்திகள்

இந்தியா மற்றும் எகிப்து இடையே பல்வேறு பயன்பாடு தகுந்த மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடபட்டுள்ளது.

  • பிரதமர் மோடி, எகிப்தின் அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியுடன் சமீபத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்ததையெடுத்து, இந்தியாவும் எகிப்தும் ஜூன் 25 அன்று பல்வேறு பயன்பாடு தகுந்த மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 
  • இந்தியா மற்றும் எகிப்து – இருநாடுகளுக்கிடையேயான உறவில் ஒரு முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் ராணுவ தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி துறை மற்றும் பல்வேறு துறைகளில் இரு நாட்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிலக்கரி சம்பத்தப்பட்ட துறையில் நிர்வாகமற்ற ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு மத்திய அரசானது ஒப்புதல் அளித்துள்ளது.

  • கோல் இந்தியா லிமிடெட், சிங்கரேணி காலியரீஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து கையெழுத்திட்டுள்ள நிர்வாகமற்ற ஊழியர்களுக்கான(NCWA-XI) ஒப்பந்தத்தை(MoA) மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
  • ஊதியத்தில் 25 சதவீதம் அதிகரிப்பு, ஜூலை 1, 2021 முதல் குறைந்தபட்ச பலன்களில் 19 சதவீதம் அதிகரிப்பு, சிறப்பு அகவிலைப்படி (SDA), மாறக்கூடிய அகவிலைப்படி (VDA)  மற்றும் உதவித்தொகை ஆகியவற்றை வழங்குவதை இந்த ஒப்பந்தமானது உறுதிப்படுத்தும் என நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தில் கடற்படையினர் கழகத்தை திறந்து வைத்துள்ளார்.

  • மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கான இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், வரவுள்ள சர்வதேச கடற்படை தினத்தையொட்டி, ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தில்(JNPA) கடற்படையினர் கழகத்தை ஜூன் 25 அன்று திறந்து வைத்துள்ளார்.
  • இந்த கழகமானது கடல்சார் தொழில் வல்லுநர்களுக்கு அவர்கள் நிலத்தில் இருக்கும் போது சரியான நுழைவாயிலாக செயல்படுதல் மற்றும் கடின உழைப்பாளிகளின் நல்வாழ்வை ஆதரித்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

IAF ஒருங்கிணைந்த செயல்பாடுகளை மையமாகக் கொண்டு “ரன்விஜய்” என்ற விமானப்படை பயிற்சியை தொடங்கியுள்ளது.

  • ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தலை மையமாகக் கொண்டு, இந்திய விமானப்படையானது “ரன்விஜய்” என்ற விமானப்படை பயிற்சியை மேற்கொண்டுள்ளது. 
  • படைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் அரசாங்க நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும் இந்திய விமானப்படையின் மின்னணு போர் திறன்களை உகந்த முறையில் தெளிவாக பயன்படுத்திக் கொள்வதையும் நோக்கமாக கொண்டு இந்த பயிற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என விமானப்படை தெரிவித்துள்ளது.

சர்வதேச செய்திகள்

கிரீஸ் நாட்டின் பிரதமராக “கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்” பதவியேற்பு.

  • கிரீஸ் நாட்டின் மத்திய-வலதுசாரி தலைவரான கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் நாட்டின் இரண்டாவது முறையாக பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிரதமராக ஜூன் 26 அன்று பதவியேற்கிறார். 
  • இவர் எதிர்க்கட்சிகள் பெற்ற 17.84 சதவீத வாக்குகளை விட இரண்டு மடங்கு அதிக வாக்குகளை பெற்று அதாவது கிட்டத்தட்ட 40.55 சதவீத பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  மேலும் இந்த வெற்றியானது அரை நூற்றாண்டில் நாட்டின் நடத்தப்பட்ட தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதிநவீன பீரங்கி வகையை சேர்ந்த “நேமர் – 1500 APC” என்று பெயரிடப்பட்ட வாகனத்தை இஸ்ரேல் நாடானது அறிமுகப்படுத்தியுள்ளது.

  • இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகமானது(IMoD) சமீபத்தில் தனது நாட்டின் மேம்பாட்டை தரத்தை உலக அரங்கிற்கு காட்டுவதற்காக அதிநவீன பீரங்கி வகையை சேர்ந்த “நேமர் – 1500 APC” என்று பெயரிடப்பட்ட வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • இந்த புதிய அதிநவீன வாகனமானது 1500 குதிரைத்திறன் கொண்ட எஞ்சினுடன், மற்ற பீரங்கி ரக வாகனங்களை விட அதிகரித்த ஆற்றல், வேகம் மற்றும் முன்னணி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாகும்.

மாநில செய்திகள்

36 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு முதலீட்டு திட்டங்களுக்கு உத்திர பிரதேச அரசானது ஒப்புதல் அளித்துள்ளது.

  • உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடைப்பெற்ற முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் போது பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் உருவான சுமார் 36 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு உத்தரபிரதேச மாநில அமைச்சரவையானது  ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதன் மூலம் முதல் பகுப்பில் 75 மாவட்டங்களுக்கும், பின்னர் மாநிலம் முழுமைக்கும் முதலீட்டுத் திட்டங்களை கொண்டு சென்று மாநிலத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் மிகப் பெரிய மெட்ரோ இணைப்புக்கு ஹரியானா மாநில அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.

  • தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு(NCR) பொது மக்கள் விரைவாக பயணிக்க கூடிய வகையில், பல்லப்கர் முதல் பல்வால் வரையிலான, மாநிலத்தின் மிகப் பெரிய மெட்ரோ இணைப்புக்கு அம்மாநில அரசாங்கமானது ஜூன் 25 அன்று ஒப்புதல் அளித்துள்ளது, 
  • இந்த சிறப்பு இணைப்பு திட்டமானது தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு செல்லக்கூடிய வழியில் உள்ள அனைத்து பகுதியின் வளர்ச்சியை மேம்படுத்தும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தின் முதல் நீருக்கடியில் ரயில் சுரங்கப்பாதையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  • அசாமின் முதல் நீருக்கடியில் ரயில் வழிக்கான சுரங்கப்பாதையானது நுமாலிகர் மற்றும் கோபூர் இடையே அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். 
  • இந்தத் திட்டத்துக்கு சுமார் கிட்டத்தட்ட ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது பிரம்மபுத்திரா ஆற்றின் கீழ் சுமார் 35 கிலோமீட்டர் நீளம் வரை அமைய இருப்பதாகவும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

உள்கட்டமைப்பு பணிக்குழுவின் மூன்றாவது ஜி-20 கூட்டம் உத்தரகாண்டில் தொடக்கம்.

  • உள்கட்டமைப்பு பணிக்குழுவின் மூன்றாவது ஜி-20 கூட்டமானது உத்தரகாண்ட் மாநிலத்தின் நரேந்திரநகரில் ஜூன் 26 அன்று முதல் இம்மாதம் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • இந்த மூன்று நாள் மாநாட்டில், நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் அவற்றை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்பத்தின் சவால்கள் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடானது நடைப்பெற உள்ளது.

விருதுகள்

பிரதமர் மோடிக்கு எகிப்தின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ வழங்கப்பட்டுள்ளது.

  • எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி, ஜூன் 25 அன்று, பிரதமர் மோடிக்கு அவரின் முக்கிய சேவைகளை பாராட்டி அந்நாட்டின் மிக உயரிய அரச விருதான “ஆர்டர் ஆஃப் தி நைல்” விருதை வழங்கி சிறப்பித்துள்ளார்.
  • இந்த விருதானது மனிதகுலத்திற்கு விலைமதிப்பற்ற சேவைகளை பாராட்டுவதற்காக வழங்கப்படும் விருதாகும் மற்றும் இது 1915 இல் நிறுவப்பட்டதாகும்.

விளையாட்டு செய்திகள்

தீக்ஷா தாகர் செக் நாட்டின் LED கோல்ஃப் பட்டத்தை வென்றுள்ளார்.

  • ஜூன் 25 அன்று நடைப்பெற்ற 300,000 யூரோ டிப்ஸ்போர்ட் – செக் நாட்டின் பெண்களுக்கான ஓபன் போட்டியில் தீக்ஷா தனது இரண்டாவது ஐரோப்பிய டூர் பட்டத்தை வென்றுள்ளார்.
  • தீக்ஷா தனது இந்த வெற்றியை பதிவு செய்ததன் மூலம் LED ஓபன் போட்டிகளில் விளையாடி இரண்டாவது முறை வென்ற இந்திய பெண்மணி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

துனிஸில் நடைபெற்ற WTT சேலஞ்சர் போட்டியில் WTT  பட்டத்தை இந்திய அணி வென்றுள்ளனர்.

  • துனிஸில் நடைப்பெற்ற உலக டேபிள் டென்னிஸ் (WTT) சேலஞ்சர் போட்டியில் இந்திய பெண்கள் இரட்டையர் அணியின் ஜோடியான அய்ஹிகா முகர்ஜி மற்றும் சுதிர்தா முகர்ஜி, ஜப்பான் ஜோடியான மிவா ஹரிமோட்டோ மற்றும் மியுயு கிஹாராவை வீழ்த்தி போட்டியில் வென்றுள்ளார். 
  • இந்த சவாலான இறுதிப் போட்டியில் இந்திய ஜோடியானது 3-1 (11-5, 11-6, 5-11, 13-11) என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கார்லோஸ் அல்காரஸ் குயின்ஸ் கிளப் பட்டத்தை வென்றுள்ளார்.

  • தி குயின்ஸ் கிளப்பில் ஜூன் 25 அன்று நடைப்பெற்ற போட்டியில் வென்று பட்டத்தை பெற்றதன் மூலம் கார்லோஸ் அல்கராஸ் தனது முதல் புல்-கோர்ட் பட்டத்தைப் பெற்றுள்ளார் மற்றும் இதன்மூலம் பெப்பர்ஸ்டோன் ஏடிபி தரவரிசையில் முதல் இடத்திற்கு திரும்பியுள்ளார்.
  • சாம்பியன்ஷிப்பின் ஆஸ்திரேலிய முதல் நிலை வீரரான  அலெக்ஸ் டி மினாரை 6-4, 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்த கோப்பையை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஓஸ்டாபென்கோ 2023 ஆம் ஆண்டுக்கான பர்மிங்காம் கிளாசிக் பட்டத்தை வென்றுள்ளார்.

  • ஜூன் 25 அன்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான பர்மிங்காம் கிளாசிக் இறுதிப் போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜெலினா ஓஸ்டாபென்கோ 7-6, 6-4 என்ற புள்ளி கணக்கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் நிலை வீராங்கனையான பார்போரா கிரெஜ்சிகோவாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
  • இந்த வெற்றியின் மூலம் ஒஸ்டாபென்கோ, தற்போது வரை WTA போட்டிகளில் தனது ஆறாவது தொழில் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய தினம்

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சர்வதேச தினம் 2023

  • 1987 ஆம் ஆண்டு சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான கூறுகள் அல்லது தண்டனைக்கு எதிரான உலகலாவிய மாநாட்டை ஐநா நடத்தியது .
  • இந்த மாநாட்டை நினைவுகூரும் வகையிலும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இந்த சர்வதேச தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தினத்திற்கான எந்த ஒரு கருப்பொருளும் குறிப்பிடவில்லை.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!