Cognizant, Amazon நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் – எந்தெந்த பணியிடங்களுக்கு தெரியுமா? முழு விவரம் இதோ!

0
Cognizant, Amazon நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் - எந்தெந்த பணியிடங்களுக்கு தெரியுமா? முழு விவரம் இதோ!
Cognizant, Amazon நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் - எந்தெந்த பணியிடங்களுக்கு தெரியுமா? முழு விவரம் இதோ!
Cognizant, Amazon நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் – எந்தெந்த பணியிடங்களுக்கு தெரியுமா? முழு விவரம் இதோ!

இந்தியா முழுவதும் தொழில்நுட்பம் அல்லாத நூற்றுக்கணக்கான வேலைகளில் காலியிடங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன. இது தொடர்பான கூடுதல் விளக்கங்கள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகள்

சமீப காலமாக, இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் IT துறையில் பணியமர்த்தும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த பணியமர்த்தல் முக்கிய தொழில்நுட்ப வேலைகளுக்கு மட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள தொழில்துறைகள் முழுவதும் திறமையான தொழிலாளர்களுக்கு அதிக தேவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் புதிய வேலையைப் பெற அல்லது ஏற்கனவே உள்ள வேலையை மாற்ற விரும்பும் பல தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

தமிழக அரசு வேலைவாய்ப்பு மோசடிகள் – அமைச்சரின் உதவியாளர் உட்பட 30 பேர் கைது! போலீசார் அதிரடி!

அந்த வகையில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு அளிக்க பணியமர்தல் செயல்முறைகளை அறிவித்து வருகிறது. அதாவது Byteweb IT Solutions Private Limited நிறுவனம் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுக்கான கஸ்டமர் சேவைகளில் புதியவர்களை தேடுகிறது. இந்த பணி முழுநேர வேலை நாள் ஷிப்டில் இருக்கும். இதன் குறைந்தபட்ச கல்வித் தகுதி 12ஆம் வகுப்பு என்றும் குறிப்பிட்ட பணிக்கான சம்பள வரம்பு கூடுதல் செயல்திறன் போனஸுடன் மாதம் ரூ.12,475 முதல் ரூ.23,587 வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு நீல்சன் நிறுவனத்தில் பயிற்சி ஆய்வாளர் பணி:

நீல்சன் குளோபல் மீடியாவின் பெங்களூர் அலுவலகத்தில் பயிற்சி ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ சான்றிதழுடன் 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதி அவசியம். விண்ணப்பதாரர்கள் நல்ல தகவல் தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும் மற்றும் மைக்ரோசாஃப்ட் அலுவலக மென்பொருளை கையாள தெரிந்திருக்க வேண்டும்.

Infotech நிறுவனத்தில் மூத்த தகவல் தொழில்நுட்ப பணியாளர் பணி:

Rivago Infotech நிறுவனத்தில் அமிர்தசரஸ் கிளை அலுவலகத்திற்கான சீனியர் IT Recruiter பதவி காலியாக உள்ளது. இரவு ஷிப்ட் முறையில் இருக்கும் இந்த வேலைக்கு விண்ணப்பதாரர்கள் அமெரிக்க சந்தை அல்லது US IT பணியாளர்களுக்கு ஆட்சேர்ப்பு செய்பவராக அல்லது விற்பனை நிர்வாகியாக இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். புதியவர்களும் விண்ணப்பிக்கலாம். சம்பள வரம்பு ரூ.14,532 முதல் ரூ.50,000 வரை ஆகும்.

Careerschool HR தரவு ஆய்வாளர் பணி:

Careerschool HR தீர்வு அதன் ஹைதராபாத் அலுவலகத்திற்கு முழுநேர தரவு ஆய்வாளர் (IT அல்லாத) பணிக்கு விண்ணப்பங்களை அழைக்கிறது. பட்டதாரி பட்டப்படிப்பில் குறைந்தபட்ச தகுதி பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இந்த வேலைக்கு கூடுதல் PF மற்றும் ESI சலுகைகளுடன் ரூ.14,000 முதல் ரூ.16,000 வரை சம்பளம் கிடைக்கும்.

ஹைதராபாத் Cognizant செயல்முறை நிர்வாகி:

நாட்டின் முன்னணி IT நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் ஹைதராபாத்தில் வாடிக்கையாளர் ஆதரவு (குரல்) செயல்முறைக்கு பொருத்தமான விண்ணப்பதாரர்களை தேடுகிறது. அதனால் பி.டெக் அல்லது உயர்நிலைப்பள்ளி பட்டதாரி பட்டம் பெற்றவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

GeniQom Technologies US IT Recruiter:

ஜெனிகோம் டெக்னாலஜிஸ் அதன் நைட் ஷிப்ட் செயல்பாட்டில் US IT பதவிக்கான காலியிடங்களை கொண்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த துறையில் 0.6 முதல் 2 ஆண்டுகள் அனுபவத்துடன் நல்ல தகவல் தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலைக்கான சம்பள வரம்பு ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரை உணவு அலவன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் பிற சலுகைகளுடன் சேர்த்து கொடுக்கப்படுகிறது.

வணிக மேம்பாட்டு பங்குதாரர்:

பெஸ்ட்டாக் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் அகமதாபாத்தில் உள்ள நிறுவனத்துக்கு வணிக மேம்பாட்டு விண்ணப்பதாரர்களை தேடுகிறது. இதற்கு MBA பட்டத்துடன் அனுபவமுள்ள விண்ணப்பதாரர்கள் தேவைப்படுகின்றனர். புதியவர்களும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் கூடுதல் செயல்திறன் போனஸுடன் ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் சம்பளமாக பெறுவார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!