தமிழக அரசு வேலைவாய்ப்பு மோசடிகள் – அமைச்சரின் உதவியாளர் உட்பட 30 பேர் கைது! போலீசார் அதிரடி!

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு மோசடிகள் - அமைச்சரின் உதவியாளர் உட்பட 30 பேர் கைது! போலீசார் அதிரடி!
தமிழக அரசு வேலைவாய்ப்பு மோசடிகள் - அமைச்சரின் உதவியாளர் உட்பட 30 பேர் கைது! போலீசார் அதிரடி!
தமிழக அரசு வேலைவாய்ப்பு மோசடிகள் – அமைச்சரின் உதவியாளர் உட்பட 30 பேர் கைது! போலீசார் அதிரடி!

தமிழகத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் பறித்து மோசடிகள் நடைபெற்றுள்ளது. அவ்வாறு மோசடி செய்த அமைச்சரின் உதவியாளர் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முதலமைச்சரின் உத்தரவு அடிப்படையில் தமிழகத்தின் டி.ஜி.பி சைலேந்திர பாபு நடவடிக்கை எடுத்துள்ளார்.

வேலைவாய்ப்பு மோசடி:

தமிழகத்தில் அதிக அளவிளான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் விரக்தியில் திண்டாடி வருகின்றனர். அவ்வாறு விரக்தியில் இருப்பவர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக அதாவது வங்கி, ரயில்வே உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை பெற்று தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பறிக்கின்றனர். அரசு வேலை என்றதும் பெரும்பாலான இளைஞர்கள் அவர்களை நம்பி பணத்தை கொடுத்து விடுகின்றனர். கடைசியில் வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் ஏமாற்றி விடுகின்றனர்.

1 முதல் 4ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் நியமனம் – வெளியான தகவல்!

இது போன்ற செயல்கள் தொடர்ந்து தமிழகத்தில் நிகழ்த்து கொண்டே தான் இருக்கின்றன. இது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தகவல் தெரியவந்துள்ளது. அதனால் உடனே வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்வோர்களை கைது செய்யுமாறு தமிழகத்தின் டி.ஜி.பி சைலேந்திர பாபு அவர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு மோசடிகள் ஆராயப்பட்டன. பின்னர் ‘ஆபரேசன் ஜாப் ஸ்கேம்’ என்ற பெயரில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் நவ.3ம் தேதி தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் மொத்தம் 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு? கொரோனா புதிய பாதிப்புகள் எதிரொலி!

அதன் மூலம் வேலைவாய்ப்பு மோசடியில் முன்னாள் அமைச்சரின் உதவியாளர் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 12 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும், இவர்கள் மீது இன்னும் பல புகார்கள் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று அரசு வேலை வாங்கித் தருவதாக யாரேனும் கூறினால் கட்டுப்பாட்டு பிரிவு எண் 044-23452359 அல்லது பொதுமக்கள் குறைதீர்ப்பு பிரிவு எண் 044-23452380 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!