தமிழகத்தில் இளநிலை பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு – தொழில் சார் வல்லுனர் தேர்வு அறிவிப்பு!

0
தமிழகத்தில் இளநிலை பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு - தொழில் சார் வல்லுனர் தேர்வு அறிவிப்பு!
தமிழகத்தில் இளநிலை பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு - தொழில் சார் வல்லுனர் தேர்வு அறிவிப்பு!
தமிழகத்தில் இளநிலை பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு – தொழில் சார் வல்லுனர் தேர்வு அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் தொழில் சார் வல்லுனர் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை அந்தந்த மாவட்ட பஞ்சாயத்தில் உள்ள கூட்டமைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தொழில் சார் வல்லுனர் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம், மோகனூர், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் தொழில் சார் வல்லுணர்வு தேர்வு நடைபெறயுள்ளது. தொழில் சார் வல்லுனர்கள் பயன்பெரும் வகையில் கிராம ஊராட்சிக்கு ஒரு நபர் என்று தேர்வு செய்யப்பட உள்ளன. இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் வழங்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு? புத்தாண்டு பரிசாக அறிவிப்பு?

இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், இளநிலை பட்டப்படிப்பு, மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராகவோ அல்லது குடும்ப உறுப்பினர் குழுவில் உறுப்பினராகவோ இருத்தல் வேண்டும். மேலும் அவர்களின் வயது வரம்பு 25 முதல் 45 வரை இருக்க வேண்டும். அத்துடன் ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பதுடன் அதனை பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். வாழ்வாதாரம், தொழில் முனைவோர் தொடர்பான அனுபவங்கள் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழக L&T நிறுவனத்தில் 1100 பேருக்கு வேலைவாய்ப்பு – மிகப்பெரிய டேட்டா சென்டர்!

மேலும் விண்ணப்பதாரர்கள், மக்கள் அமைப்பின் நிர்வாகியாகவோ அல்லது பணியாளர்களாகவோ அல்லது மக்கள் பிரதிநிதியால் தேர்ந்தெடுக்கப்பட உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதியாகவோ இருத்தல் கூடாது என்றும் தெரிவித்துள்ளன. வட்டார அளவிலான அணித்தலைவர்களான புதுச்சித்திரம் – மீனாட்சி 70100 93524 , திருச்செங்கோடு – நிர்மலா 86753 31511, பள்ளிபாளையம் – ரவிகுமார் 94890 42875, மோகனூர் – செந்தில்குமார் 90037 72607 ஆகியோரை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை வழங்கலாம் என்று கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!