மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு? புத்தாண்டு பரிசாக அறிவிப்பு?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு? புத்தாண்டு பரிசாக அறிவிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு? புத்தாண்டு பரிசாக அறிவிப்பு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு? புத்தாண்டு பரிசாக அறிவிப்பு?

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி உயர்வு மேலும் 3% அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அகவிலைப்படி:

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி தொகை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. மத்திய அரசு பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 31% வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சென்ட்ரல் வங்கியில் 115 காலிப்பணியிடங்கள் – விண்ணப்ப முறை, கட்டணம், தேர்வு முறை விளக்கம்!

இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புத்தாண்டு பரிசாக 2022 ம் ஆண்டு மேலும் 3% அகவிலைப்படி உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் 2021 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 31.81 சதவீதமாகவும், ஆகஸ்ட் மாதத்தில் 32.81% ஆகவும் செப்டம்பர் மாதத்தில் 32.81% ஆகவும் உயரும்.

தமிழக L&T நிறுவனத்தில் 1100 பேருக்கு வேலைவாய்ப்பு – மிகப்பெரிய டேட்டா சென்டர்!

இந்த அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு நிதி செலவாகும். ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட 31% அகவிலைப்படி உயர்வால் 9,488.70 கோடி ரூபாய் செலவாகும். மேலும் அடுத்த மகிழ்ச்சியான செய்தியாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஆண்டு பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!