Jio Phone Next முன்பதிவு அடுத்த வாரம் முதல் துவக்கம் – என்னென்ன சிறப்பம்சங்கள்?

0
Jio Phone Next முன்பதிவு அடுத்த வாரம் முதல் துவக்கம் - என்னென்ன சிறப்பம்சங்கள்?
Jio Phone Next முன்பதிவு அடுத்த வாரம் முதல் துவக்கம் - என்னென்ன சிறப்பம்சங்கள்?Jio Phone Next முன்பதிவு அடுத்த வாரம் முதல் துவக்கம் - என்னென்ன சிறப்பம்சங்கள்?
Jio Phone Next முன்பதிவு அடுத்த வாரம் முதல் துவக்கம் – என்னென்ன சிறப்பம்சங்கள்?

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள மலிவு விலையிலான ஸ்மார்ட் போன்கள் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாகவும், அதற்கான முன் பதிவு அடுத்த வாரம் முதல் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்பதிவு துவக்கம்

மக்களின் அன்றாட தேவைகளில் அதிகளவு ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அனைத்து வகையான வாடிக்கையாளர்களும் பயன்படுத்தக்கூடிய மலிவு விலையிலான ஸ்மார்ட் போன்களை தயாரித்துள்ளது. இது தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறுகையில், மலிவு விலையிலான புதிய ஸ்மார்ட்போன்களை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து உருவாக்கி வருவதாகவும், அவை செப்டம்பர் 10 ஆம் தேதியன்று வெளியாகும் எனவும் தகவல் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து – முதல்வர் உத்தரவு!

இது தொடர்பாக ஜியோ வெளியிட்டுள்ள விவரக்குறிப்புகளில், புதிய ஸ்மார்ட் போன்கள் HD டிஸ்ப்ளே மற்றும் 3 GB ரேம் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஜியோ ஸ்மார்ட் போன் நெக்ஸ்ட் ப்ரீ-புக்கிங் அடுத்த வாரம் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்காக ஜியோ நிறுவனம், அதன் சில்லறை பங்காளிகளுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த மலிவு விலை ஸ்மார்ட் போன்களுக்கான விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருந்தாலும் ஒரு ஜியோபோன் நெக்ஸ்ட் ரூ.3,499 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதன் சிறப்பம்சங்களாக வெளியாகியுள்ள தகவல்களில், ஆண்ட்ராய்டு 11 (Go edition), 5.5 இன்ச் HD டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் QM215 SoC ஆகியவற்றுடன் 2 GB மற்றும் 3 GB ரேம் உடன் 16 GB மற்றும் 32 GB eMMC 4.5 storage கொடுக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, ஜியோ போன் நெக்ஸ்ட் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமரா சென்சார் மற்றும் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் இருக்கலாம். இதில் 2,500mAh பேட்டரி மற்றும் 2 சிம் இணைப்புடன் v4.2 மற்றும் GPS இணைப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனுடன் ஜியோ போன் நெக்ஸ்ட் சிஸ்டம் ரீட் அலவுட் மற்றும் மொழிபெயர்ப்பு அம்சங்களுடன் வரும் என்பதை ஜியோ உறுதிப்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!