கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் களமிறங்கும் நடிகை வனிதா – வெளியான புகைப்படம்!

0
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் களமிறங்கும் நடிகை வனிதா - வெளியான புகைப்படம்!
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் களமிறங்கும் நடிகை வனிதா - வெளியான புகைப்படம்!
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் களமிறங்கும் நடிகை வனிதா – வெளியான புகைப்படம்!

தமிழ் தொலைக்காட்சிகளில் சர்ச்சை நாயகியாக வலம் வரும் வனிதா விஜயகுமார், விஜய் தொலைக்காட்சியில் இருந்து வந்த நிலையில் தற்போது வேறு ஒரு தொலைக்காட்சியில் சிறப்பு விருந்திரனாக கலந்து கொள்ள உள்ளார். அது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

வனிதா விஜயகுமார்:

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தமிழ் மக்களிடம் புகழ் பெற்றவர் நடிகை வனிதா விஜயகுமார். அந்நிகழ்ச்சி முடிந்த பின்னரும் தன்னுடைய மூன்றாவது திருமணம் காரணமாக சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக இருந்தார். அதன் பின்னர் அவருடைய திருமண வாழ்க்கை சில மாதங்களில் முடிந்த நிலையில், அமைதியான அவர் நிகழ்ச்சிகளில் ஆர்வம் செலுத்த தொடங்கினார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் என தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்திய IT நிறுவனங்களில் பெருகும் வேலைவாய்ப்புகள் – ஆய்வு தகவல்!

அதன் பின்னர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் மாஸாக காளி வேடமிட்டு, மொக்கையாக நடனம் ஆடியதால் நடுவரான ரம்யா கிருஷ்ணன் கடுப்பாக கருத்து தெரிவித்தார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாத வனிதா, நடுவர் என பார்க்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அந்த மேடையில் இருந்து வெளியேறினார். அது பற்றிய அறிவிப்பை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில், அவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், கன்னி தீவு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக களமிறங்கி உள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அந்த நிகழ்ச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்ட வனிதா, புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னித்தீவு நிகழ்ச்சியில், ரோபோ சங்கர், ஷகிலா, ஜாங்கிரி மதுமிதா போன்றவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஜாங்கிரி மதுமிதாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வனிதா பிரசாந்தின் அந்தகன், பிக்கப் ட்ராப், வசந்தபாலனின் புதிய படம் வெள்ளித்திரையிலும் பிஸியாக இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!