JIO மற்றும் BSNL ரூ.75 ரீசார்ஜ் திட்டம் – அதிக பலன்கள் எங்கே?
நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களை அதிகரிப்பதற்காக அதிக பலன்களை கொண்ட பல புதிய ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவங்கள் இரண்டும் வழங்கும் ரூ.75 திட்டம் குறித்து இந்த பதிவில் காண்போம்.
புதிய திட்டங்கள்:
நாட்டின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பு திட்டங்களையும் குறைந்த விலையில் வழங்கி வருகிறது.
TN Job “FB
Group” Join Now
ஒரு குறிப்பிட்ட அளவு தொகையில் பல நிறுவனங்களும் வழங்கும் சலுகைகளையும், அவற்றில் எந்த திட்டம் அதிக பலன்களை தருகிறது என்பதும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
BSNL ரூ.75 திட்டம்:
அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் சமீபத்தில் தான் ரூ.75 க்கான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 100 நிமிடங்களுக்கு இலவச கால்களையும் வழங்குகிறது. 100 நிமிடங்களுக்கு பிறகு 30 பைசா கட்டணத்தில் அழைப்புகள் வழங்கப்படுகிறது. மேலும், இலவச பிஆர்பிடி டியூனும் வழங்கப்படுகிறது. மொத்தம் 60 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
ஜியோவின் ரூ.75 திட்டம்:
இந்த திட்டம் ஜியோ போன் பயனர்களுக்காக மட்டும் வழங்கப்படும் திட்டமாகும். 28 நாட்கள் வேலிடிட்டி உள்ள இந்த திட்டத்தில் மொத்தம் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 0.1 ஜிபி டேட்டா + 200 எம்பி டேட்டா மேலும், 50 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால்களும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
ரூ.80 க்கு குறைவான திட்டங்கள்:
VI நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.79 க்கான திட்டத்தில் மொத்தம் ரூ.64 க்கு டாக்டைம் வழங்குகிறது. மேலும், 200 எம்பி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. Vi Key பயன்பாட்டின் மூலம் பயனர்கள் ரீசார்ஜ் செய்தால், அவர்களுக்கு கூடுதல் 200 MB டேட்டா வழங்கப்படும். அதேபோல், ஏர்டெல் நிறுவனமும் ரூ.79 க்கு ஒரு திட்டத்தை வழங்குகிறது. அதிலும் ரூ.64 க்கு டாக்டைம் மற்றும் 200 எம்பி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.