Airtel vs Jio vs BSNL vs Vi வழங்கும் ரூ.300 க்குள் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்கள் – சூப்பர் சலுகை!
ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் விஐ ஆகிய நிறுவனங்கள் குறைந்த விலையில், அதிக பலன்களை கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த திட்டங்கள் குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
ப்ரீபெய்ட் திட்டங்கள்:
நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் விஐ ரூ. 300க்கு கீழ் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றது. தினசரி டேட்டா, கால்கள் மற்றும் SMS பலன்களை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த திட்டங்கள் உகந்ததாக இருக்கும். நிறுவன வாரியாக திட்டங்களையும் அதன் பலன்களையும் காண்போம்.
ஏர்டெல்:
ஏர்டெல் ரூ.219க்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. அதில், ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள், மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சந்தா மற்றும் Wynk இசை ஆகிய பலன்கள் கிடைக்கிறது. ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ரூ.129 திட்டத்தில் வழங்கப்பட்ட கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது. மேலும் 10 ரூபாய்க்கு, பயனர்கள் Zee5 பிரீமியத்திற்கான வருடாந்திர சந்தாவை பெறலாம்.
தமிழக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகளாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சந்தா மற்றும் இலவச ஆன்லைன் படிப்புகளுக்கான அணுகலுடன் கூடிய Wynk இசை மற்றும் Fastag இல் ரூ.150 கேஷ்பேக் ஆகியவை கிடைக்கிறது. மேலும், பார்தி ஆக்சா ஆயுள் காப்பீட்டிற்கான அணுகலையும் வழங்குகிறது.
ஜியோ:
ஜியோ ரூ 155 ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்களுக்கு, 28 ஜிபி டேட்டா வழங்குகிறது. 300 இலவச எஸ்எம்எஸ், அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தாவையும் வழங்குகிறது. ஜியோவில் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இதில், 300 இலவச எஸ்எம்எஸ், அன்லிமிடெட் கால்கள்மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான பாராட்டு சந்தா கிடைக்கிறது. ஜியோ 199 ரூபாய்க்கு ப்ரீபெய்ட் திட்டத்தில், 28 நாட்கள் வேலிடிட்டியில் 42 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 1.5 ஜிபி என்ற வகையில் கிடைக்கும்.
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
மேலும், அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான பாராட்டு சந்தாவுடன் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் யோ பயன்பாடுகளுக்கான சந்தா கிடைக்கிறது.
Vi நிறுவனம்:
விஐ நிறுவனத்தில், ரூ.219 ப்ரீபெய்ட் திட்டதில் ஒரு நாளைக்கு 1GB டேட்டா 28 நாட்களுக்கு வாழங்கப்படுகிறது. மற்றொரு ப்ரீபெய்ட் திட்டமான ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்கள் கிடைக்கிறது. மேலும், ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்திலும் அன்லிமிடெட் கால்களுடன் ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல்:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.118 மற்றும் ரூ.187 விலையில் 21 நாட்கள் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் முறையே 0.5ஜிபி தினசரி டேட்டா மற்றும் 2ஜிபி தினசரி டேட்டா வழங்கப்படுகிறது. BSNL இன் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் 30 நாட்களுக்கு 50ஜிபி டேட்டா மேலும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஈரோஸ் நவ் சிறப்பு அணுகல் கிடைக்கிறது இணையத்தின் வேகம் 80 கேபிபிஎஸ் ஆகக் கிடைக்கும். பிஎஸ்என்எல் ரூ.197 விலையில் 2ஜிபி தினசரி டேட்டாவை 150 நாட்களுக்கு வழங்குகிறது.