![அப்பா பற்றி கேட்கும் லட்சுமி, உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கும் கண்ணம்மா - 'பாரதி கண்ணம்மா' அடுத்த எபிசோடு! அப்பா பற்றி கேட்கும் லட்சுமி, உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கும் கண்ணம்மா - 'பாரதி கண்ணம்மா' அடுத்த எபிசோடு!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/11/அப்பா-பற்றி-கேட்கும்-லட்சுமி-உண்மையை-சொல்ல-முடியாமல்.jpg)
அப்பா பற்றி கேட்கும் லட்சுமி, உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கும் கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த எபிசோடு!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஹேமா பாரதியுடன் இருக்கும் காட்சியை பார்த்து அப்பாவுக்காக ஏங்கும் லட்சுமியிடம் பதில் சொல்ல முடியாமல் கண்ணம்மா விக்கித்து நிற்பது போல அடுத்தகட்ட கதைக்களம் வெளியாக இருக்கிறது.
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இடையே சண்டை, மோதல், வாக்குவாதங்கள் என பல்வேறு சம்பவங்கள் நடந்தாலும் அதில் பாசப்போராட்டமும் ஒரு முக்கிய இடத்தை வகித்து வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மாவின் மகள் ஹேமா என்கிற உண்மை தெரியாத பட்சத்திலும் ஹேமாவுக்கு கண்ணம்மா மீதும், கண்ணம்மாவுக்கு ஹேமா மீதும் ஈர்ப்பு இருந்து வந்தது. அதே போல தான் பாரதிக்கும் லட்சுமிக்கும் இடையே அப்பா மகள் உறவு உருவானது.
‘பாரதி கண்ணம்மா’ முன்னாள் அகிலன் யார் தெரியுமா? சின்னத்திரை டூ வெள்ளித்திரை!
இப்போது கண்ணம்மாவுக்கு உண்மை தெரிந்ததும் அவர் ஹேமாவை தன்னுடைய மகளாக்கி கொள்ளும் படி முயற்சித்து வருகிறார். மறுபக்கத்தில் லட்சுமியோ அப்பாவை நினைத்து ஏக்கம் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் லட்சுமியிடம் உண்மையை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்து நிற்பது கண்ணம்மா தான். இருந்தாலும் என்றாவது ஒரு நாள் லட்சுமி மற்றும் ஹேமாவுக்கு பாரதி- கண்ணம்மா தான் தங்களது உண்மையான அப்பா அம்மா என்கிற உண்மை தெரிய வரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் இன்றைய நாளுக்கான எபிசோடில் மீண்டுமாக லட்சுமி தனது அப்பா பற்றிய ஏக்கங்களை கண்ணம்மாவிடம் பகிர்ந்து கொள்கிறார். அதாவது, ஹேமாவின் அப்பா அவருடன் எப்படி இருக்கிறார். ஆனால் என்னுடைய அப்பா மட்டும் என்னை பார்க்க வரவில்லை. எனக்கு சாப்பாடு ஊட்டி விட வேண்டும் என அவருக்கு தோன்றாதா என கேள்விகளை அடுக்குகிறார்.
விஜய் டிவி புதிய ‘கண்ணம்மா’ வினுஷா யார் தெரியுமா? முக்கிய தகவல்கள்! ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?
ஆனால் பாரதி தான் உன் அப்பா என்கிற உண்மையை லட்சுமியிடம் கூற முடியாமல் மனதுக்குள் உன் அப்பா உனக்கு எதிரிலேயே இருக்கிறார் என நினைத்து கொள்கிறார் கண்ணம்மா. இந்த வீடியோ வலைதளங்களில் வெளியாக அதனை கண்ட ரசிகர்கள் உங்க ஆசை ரொம்ப தூரத்துல இல்ல, எதிர்லையே தான் இருக்கு! ஆனாலும் டைரக்டர் சார் மனசு வைக்கணுமே, இப்படி மைண்ட் வாய்ஸ்லயே பேசிட்டு இருந்தா ஒன்னும் நடக்காது கண்ணம்மா என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.