விஜய் டிவி புதிய ‘கண்ணம்மா’ வினுஷா யார் தெரியுமா? முக்கிய தகவல்கள்! ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஏற்கனவே கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி மாற்றப்பட்டதை தொடர்ந்து புதிய கண்ணம்மாவாக மாடல் அழகி வினுஷா அறிமுகமாகி இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா:
தமிழ் சீரியல்களில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் மாறுபட்ட கதைக்களம் இருக்கிறது. காதலித்து திருமணம் செய்து கொண்ட பாரதியும், கண்ணம்மாவும் சந்தேகம் என்ற வியாதியால் பிரிந்து விட அவர்களின் இரண்டு குழந்தைகளும் அம்மாவிடம் ஒன்றும் அப்பாவிடம் ஒன்றும் வளர்கிறது. அம்மாவிடம் வளரும் குழந்தை அப்பா பாசத்திற்கும், அப்பாவிடம் வளரும் குழந்தை அம்மா பாசத்திற்கும் ஏங்கி தவிக்கிறது.
‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் ரக்ஷிதாவிற்கு பதில் பிரபல நடிகை – இணையத்தில் கசிந்த தகவல்!
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு மேலாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி ஹரிபிரியன் தற்போது அந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ள நிலையில் அந்த கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் நடிப்பாரா அல்லது சீரியல் முடிவடையுமா என்ற தகவல்கள் வந்தது. ஆனால் அதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், மாடல் அழகி வினுஷா என்பவர் கண்ணம்மாவாக மாறி நடிக்க தொடங்கிய இருப்பது போல புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவிற்கு விரைவில் பிறந்தநாள் & குழந்தை பிறப்பு – குவியும் வாழ்த்துக்கள்!
ரோஷினி போலவே வினுஷா இருந்தாலும் அவரது நடிப்பு ரோஷினி போல இருக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் 3 ஆண்டுகளாக டாப் சீரியலில் இந்த சீரியல் இருப்பதால் அதே போல தொடர அவரது கடினமான உழைப்பை போட வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சீரியலில் எந்த மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.