‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவிற்கு விரைவில் பிறந்தநாள் & குழந்தை பிறப்பு – குவியும் வாழ்த்துக்கள்!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் இளம் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பரீனா. அவருக்கு ஒரு சில நாட்களில் குழந்தை பிறக்க இருக்கும் நிலையில், அவரது பிறந்தநாளும் இந்த மாதம் வருவதால் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாரதி கண்ணம்மா:
தமிழ் சீரியல்களில் பல முன்னணி வில்லிகளை பார்த்திருக்கோம். ஆனால் இளம் வயதில் கொடூரமான வில்லியாக விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை பரீனா நடித்து வருகிறார். சமையல் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்த நடிகை பரீனாவிற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது. அவரது கணவர் ரகுமான் திரையுலகில் தான் இருக்கிறார். இந்நிலையில் பரீனா தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
பாவனி & நிரூப் இடையே உருவாகும் புதிய பிரச்சனை – வெளியான ‘பிக்பாஸ்’ சீசன் 5 ப்ரோமோ!
அவருக்கு இந்த மாதம் குழந்தை பிறக்க இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து கர்ப்பகால உடற்பயிற்சிகள் குறித்தும், யோகா குறித்தும் பரீனா வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதனால் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு அது நல்ல வழிகாட்டுதலாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவர் நிறைமாதமாக இருந்தாலும் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். அதனால் அவருக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் ரீஎன்ட்ரி கொடுக்கும் அபிஷேக் ராஜா – ரசிகரின் கேள்விக்கு பதில்!
இந்நிலையில் அவரது பிறந்தநாள் வருகிற நவம்பர் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது 29 வது பிறந்தநாளில் குழந்தை பிறக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அவருக்கு என்ன குழந்தை பிறக்கும் என ஆவலுடனும், தொடர்ந்து சீரியலில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் இருக்கின்றனர்.