‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் ரக்ஷிதாவிற்கு பதில் பிரபல நடிகை – இணையத்தில் கசிந்த தகவல்!
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இருந்து நடிகை ரக்ஷிதா திடீரென விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மஹா கதாப்பாத்திரத்தில் ‘அரண்மனை கிளி’ சீரியல் நடிகை மோனிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை மோனிஷா
சமீப காலமாக விஜய் டிவியின் சீரியல் பிரபலங்கள் பலர் சீரியல்களை விட்டு விலகி வருகின்றனர். பொதுவாக 3 ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பயணிக்க முடியாமல் சில நடிகர், நடிகைகள் அவ்வப்போது சீரியல்களை விட்டு விலகுவது உண்டு. சின்னத்திரையை பொறுத்தவரை இந்த மாற்றம் என்பது மாறாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில வாரங்களில் விஜய் டிவியில் இருந்து மட்டும் 3 முக்கிய சீரியல் நடிகர், நடிகைகள் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
பாவனி & நிரூப் இடையே உருவாகும் புதிய பிரச்சனை – வெளியான ‘பிக்பாஸ்’ சீசன் 5 ப்ரோமோ!
இது விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியின் முக்கியமான சீரியலான ‘பாரதி கண்ணம்மா’வில் இருந்து நடிகை ரோஷினி விலகுவதாக கூறப்பட்டிருந்த தகவல் தற்போது உறுதியாகி இருக்கிறது. இது தவிர ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் இருந்து நடிகர் தர்ஷன் விலகி இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தற்போது ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இருந்து நடிகை ரக்ஷிதா விலகி இருக்கிறார்.
இந்த தகவலை அந்த நடிகையும் தற்போது உறுதிபடுத்தி இருக்கிறார். இப்போது நடிகை ரக்ஷிதாவுக்கு பதிலாக ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் ஒரு முக்கியமான சீரியல் நடிகை நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ‘அரண்மனைகிளி’ என்ற சீரியலில் ஜானு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் பிரபல மலையாள நடிகை மோனிஷா.
‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவிற்கு விரைவில் பிறந்தநாள் & குழந்தை பிறப்பு – குவியும் வாழ்த்துக்கள்!
இவர் இனி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் மஹாவாக நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த தகவல்கள் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் நடிகை மோனிஷா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ தொடரில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.